முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து பல முன்னணி நட்சத்திரங்கள் பல தகவல்களை பேசியிருந்தாலும், மறைந்த நடிகர் மயில்சாமி, முடிவெட்டும் தொழிலாளியிடம் எம்.ஜி.ஆர் நடந்துகொண்ட விதம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, 10 வருட இடைவெளிக்கு பிறகு நாயகனாக உருவெடுத்த எம.ஜி.ஆர் ஒரு கட்டத்தில், சரிவை சந்தித்தபோது தனக்கான கதையை தானே உருவாக்கி சொந்த படம் எடுத்து தனது வெற்றியை நிலைநிறுத்திக்கொண்டவர்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் எதையும் செல்லும் வல்லமையுடன் வலம் வந்த எம்.ஜி.ஆர், அரசியலிலும் கால்பதித்து வெற்றி கண்டவர். இவர் முதல்வர் ஆவதற்கு முன்பு, தி.மு.க.வில் இயங்கி வந்துள்ளார். அப்போது அதிகம் கடவுள் நம்பிக்கை இல்லாத எம்.ஜி.ஆருக்கு ஒரு இஸ்லாமியர் முடி வெட்டும் தொழிலாளியாக அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவர் எம்.ஜி.ஆருக்கு முடி வெட்டும்போது அல்லா பற்றி பேசிக்கொண்டே இருந்துள்ளார்.
சில மாதங்கள் இதை கேட்டு பொறுமையாக இருந்த எம்.ஜி.,ஆர், ஒரு கட்டத்தில் நீங்கள் அல்லா பற்றி பேசிவிட்டு அதன்பிறகு முடி வெட்டுகள் அல்லது முடி வெட்டிவிட்டு அல்லா பற்றி பேசுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்காத அந்த முடி வெட்டும் தொழிலாளி, தொடர்ந்து அல்லா பற்றி பேசிக்கொண்டே முடி வெட்டியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இதை விரும்பாத எம்.ஜி.ஆர், ஒருநாள் அவர் முடி வெட்டி முடிந்தவுடன், அவருக்கு செட்டில்மெண்ட் செய்து அனுப்பிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்படி உதவியாளர்கள் அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். அதன்பிறகு அவரும் எம்.ஜி.ஆரை பார்க்காத நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆரை பார்க்கலாம் என்று அவர் சென்றுள்ளார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், ஒரு பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது, இந்த முடி வெட்டும் தொழிலாளியும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
அந்த கூட்டத்திற்கு வந்த எம்.ஜி.ஆர், அனைவரயும் பார்த்துவிட்டு செல்லும்போது, இவரை பார்த்து, அழைத்துள்ளார். இதை எதிர்பார்க்காத முடி வெட்டும் தொழிலாளி எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரிடம் எம்.ஜி.ஆர் அல்லா நல்லா இருக்காரா என்று கேட்டுள்ளார். 10 வருடங்கள் தன்னை பார்க்கவில்லை என்றாலும், தன்னை ஞாபகம் வைத்து அழைத்து அல்லா நல்லாருக்காரா என்று கேட்ட எம்.ஜி.ஆரை பார்த்து அந்த தொழிலாளி கண்ணீர் விட்டு கட்டி அனைத்து மகிழ்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.