இயக்குனர் இமயம் பாரதிராஜா நேசித்து எடுத்த படத்திற்கு தணிக்கை சான்று கொடுக்க முடியாது என்று சொன்னபோது, அவருக்காக டெல்லி வரை சென்று சப்போர்ட் கொடுத்துள்ளார் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.
Advertisment
தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுவபவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாக பல படங்களை கொடுத்த பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான படம் வேதம் புதிது. ஜாதி ஒழிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படம் அன்றைய காலட்டத்தில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி பலரின் பாராட்டுக்களை பெற்றது.
ஊர் பெரியவரான சத்யராஜா தனது மகன் இறந்துவிட்டாலும், அவர் காதலித்த பிராமண குடும்பத்து பெண்ணை தனது மகளாக ஏற்றுக்கொண்டு வாழந்து வரும்போது அவர் சந்திக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் பாலு தேவர் என்ற கேரக்டரில் நடித்துள்ள சத்யராஜ் தனது மருமகளான அமலாவின் தம்பியாக இருக்கும் ஒரு சிறுவனை தனது தோலில் தூக்கிக்கொண்டு ஆற்றில் நடந்து சென்றுகொண்டிருப்பார்.
அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலில், அந்த சிறுவன், பாலு உங்க பெயர் தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா என்று சத்யராஜூ வை பார்த்து கேட்பார். அப்போது சத்யராஜ் தனது கன்னத்தில் யாரோ ஒருவர் அறைந்தபோன்ற உணர்வை கொடுத்திருப்பார். இந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாதி வேண்டாம் என்ற கருத்தை கடுமையாக வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட வேதம் புதிது திரைப்படத்திற்கு பல தடைகள் வந்துள்ளது.
Advertisment
Advertisements
அந்த காலக்கட்டத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் படத்தின் வெளியீட்டுக்கு பெரிய உதவி செய்துள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ்காக, ஒரு அமைச்சரை டெல்லி வரை அனுப்பி அந்த படத்திற்கு சென்சார் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் சென்சார் குழுவினர் இந்த படத்திற்கு சென்சார் கொடுக்க முடியாது என்று சொன்னபோது, இந்த படத்தின் ஃபிலிம் ரோல்களை சாஸ்திரி பவனில் வைத்து எரிப்பேன். அப்போது நீங்கள், தமிழ்நாடு முழுவதற்கும் பதில் சொல்ல வேண்டி வரும். எனக்கு இரு தினங்களில் சென்சார் சான்றிதழ் தேவை என்று பாரதிராஜா கூறியுள்ளார். அதன்பிறகு அவர்கள் சென்சார் கொடுத்தாக ஒரு பேட்டியில் பாரதிராஜா கூறியுள்ளார்.