/indian-express-tamil/media/media_files/2025/09/13/ilayaraja-stalin-mj-2025-09-13-18-33-30.jpg)
சிப்பொனி இசை அமைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பாராட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய திரை இசையின் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இவர் திதிரை இசை 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த சாதனைக்காக அவருக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விழா நடத்தப்பட்டது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழா இன்று (செப்டம்பர் 13) மாலை தொடங்கிய நிலையில், விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி., நடிகர் ரஜினிகாந்த் சத்யராஜ், பிரபு, இயக்குனர் மமிஷ்கின்,உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திடீரென எழுந்து பேசிய நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியில் ஒலிக்கும் அனைத்து பாடல்களும் என்னை போன்ற ஒரு ரசிகனால் தேர்வு செய்யப்பட்டது. அந்த ரசிகன் வேறு யாரும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறினார். இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய விழாவில் பங்கேற்கும் ரசிகர்கள், இளையராஜா போட்டுள்ள 8,000 பாடல்களில் 4,000 பாட்டு சிம்பொனிதான்.. இப்போது சிம்பொனி என்ற இலக்கணத்திற்காக பரீட்சை எழுதி பாஸ் பண்ணிருக்காரு என்று உற்சாகமாக கூறியிருந்தனர்.
இதனிடையே நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய இளையராஜா, இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். சிம்பொனி இசையமைக்கச் செல்வதற்கு முன் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், திரும்பி வரும்போது எனக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. இன்று பாராட்டு விழாவும் நடத்துகிறார்கள். இதை என்னால் நம்ப முடியவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மேல் வைத்த அதே அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்.
எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான். என் கற்பனையில் தோன்றிய இசையை 87 பேருக்கு எழுதியதுதான் அவர்கள் வாசித்தார்கள். 35 நாட்களில் சிம்பொனி இசையை வடித்தேன். ஏராளமான சுய கட்டுப்பாடுகளுடன் சிம்பொனி இசையை உருவாக்கினேன். இதற்காக நான் எனது குழந்தைகளுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்களுடன் நேரம் செலவழித்து இருந்தால் நான் இசையமைத்தும் இருக்க முடியாது. சிம்பொனியும் அரங்கேற்றி இருக்க முடியாது.
சிம்பொனி இசையைக் கேட்டு அழுததற்குச் சாட்சிதான் கமல். சிம்பொனி இசையை தமிழ்நாட்டுக்கும் இசைக்கும் முடிவுக்கு உடனே முதல்வர் சரி என்றார். சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதனால் பெரிய மைதானத்தில் இதே கலைஞர்களை நடத்துவேன். இதற்கு தமிழக முதல்வர் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்வார் என்று நம்பிக்கையுடன் அவரை கேட்காமலே இதனை கூறுகிறேன் என்று இளையராஜா பேசியுள்ளார்.
முன்னதாக நிகழ்ச்சியின் பேசிய மு.க.ஸ்டாலின், இளையராஜா மொழி, எல்லையை கடந்து அனைவருக்கும் சொந்தமானவர். இவர் மட்டும் இசையமைத்திருந்தாலும், திருக்குறள், நற்றிணை, புறநானூறு, சிலப்பதிகாரம் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று சமூக வலைதளத்தில் ஒருவர் எழுதியிருந்தார். நானும் இதையே தான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சங்கத் தமிழ், தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும்.
இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும் என்ற அறிவிக்கிறேன். நமது இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடமும் சூட்டினாலும் அது சாதாரணம் தான். அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.