நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அவரது ரசிகர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள லியோ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதனிடையே கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நடைபெற இருந்த லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரோஹினி திரையரங்கில் வெளியிடப்பட்ட டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அங்கு இருக்கைகளை சேதப்படுத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனிடையே சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி, ரஹ்மானின் கச்சேரியில் கூட்ட நெரிசலுக்கும், ரோகிணி தியேட்டர் சூறையாடப்பட்டதற்கும் போலீஸாரின் அலட்சியமே காரணம் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன் சமர்பித்த தமிழக அரசு வழக்கறிஞர் (எஸ்பிபி) ஹசன் முகமது ஜின்னா, லியோ படம் வெளியாகும் முன்பே விஜய் ரசிகர்களுக்கு எதிரான அரசு செயல்படுவதாக பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது. லியோவின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு காவல்துறைக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய கச்சேரியில் நடந்த சம்பவம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுததியது. இது போன்ற நெரிசல் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்குமாறு மட்டுமே நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ரஹ்மானின் நிகழ்வின் போது ஏற்பட்ட குழப்பத்திற்கோ அல்லது லியோவின் டிரெய்லர் திரையிடலின் போது ரோகினி திரையரங்கம் சூறையாடப்பட்டதற்கோ காவல்துறையைக் குறை கூற முடியாது.
தியேட்டருக்கு ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. புகார் இல்லாமல் போலீசார் எப்படி தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், பாதை அணிவகுப்புகளுக்கு அனுமதி வழங்குவதைக் குறிப்பிடும் எஸ்பிபி (SPP) சட்டம் மற்றும் ஒழுங்கு பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது; மேலும் இதுபோன்ற நிகழ்வுகளின் போது அமைதியை உறுதிப்படுத்த நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“