விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், படம் குறித்து வெளியாகும் பாசிட்டீவ் மற்றும் நெகடீவ் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர்கள் வெளியிடும் சுவாரஸ்யமாக தகவல்கள் லியோ குறித்து ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.
அதே சமயம் லியோ குறித்து வெளியாகும் நெகடீவ் தகவல்களும் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. லியோ படம் வெளியான இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் நாள் வசூலில் 75 சதவீதத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் கேட்ட பங்கு கொடுத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி வரும் திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமோக முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் முதல் 5 நாட்களுக்கு தமிழக அரசு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 5 காட்சிகளையும் 16.5 மணி நேரத்திற்குள் (காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 வரை) முடிக்க வேண்டும். இதனால் ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையே உள்ள இடைவெளி, தியேட்டரை சுத்தம் செய்யும் நேரம், உணவு மற்றும் குளிர்பாணங்கள் விற்பனை, தியேட்டரில் விளம்பரம் திரையிடுவது அனைத்தும் பாதிக்கபடும் என்று திரைப்பட கண்கானிப்பாளர் ஸ்ரீதர் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
3 days for #LEO release!
— Sreedhar Pillai (@sri50) October 16, 2023
Prime single screens & multiplexes in #Chennai & suburbs yet to open advance booking for #LEO!
Bone of contention is “playing terms & conditions.” Distributors are asking for 5 to 10% increase from normal terms, which theatres say will kill their… pic.twitter.com/GvwdYsJUMZ
மேலும் ஒரு பெரிய படம் வெளியாகும்போது இது போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம் தான் என்று கூறியுள்ள திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், விநியோகஸ்தர்கள் கூடுதல் தொகை கேட்பதாகவும், அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வார கலெக்ஷனில் 60 சதவீதம் கொடுப்பதாக கூறியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.