ஓ சொல்ல முடியாது... சமந்தாவுக்கு எதிராக ஆண்கள் சங்கம் போர்க்கொடி!
Tamil Cinema Update : பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதை கேட்டு சிறுவர்கள் இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள்
Tamil Cinema Update : பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதை கேட்டு சிறுவர்கள் இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள்
Pushpu Movie Samantha Song Update : தெலங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் தயாராகியுள்ள படம் புஷ்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில், ரேஷ்மிகா மந்தானா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisment
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் தயாரித்துள்ளது. 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் 17-ந் தேதி தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாள இந்த படம்த்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம்பெறும் ஒ சொல்றியா மாமா ஓஓ சொல்றியாமா என்ற பாடல் வெளியிடப்பட்டது. அல்லு அர்ஜூன் நட்புக்காக நடிகை சமந்தா இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழில் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வருகிறது
Advertisment
Advertisements
ஆனால் இந்த பாடல் முழுவதும் ஆண்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று கூறி தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துமிலன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதை கேட்டு சிறுவர்கள் இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்த ஆண்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தடை செய்யவில்லை என்றால் பாடலை எழுதிய விவேகா, இந்த பாடலுக்கு நடனமாடிய சமந்தா, பாடலை பாடிய ஆண்ட்ரியா இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்கநர் சுகுமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஆந்திராவில், ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இந்த பாடலுக்கு எதிராகவும், இந்த பாடலுக்கு நடனமாடியுள்ள சமந்தாவுக்கு எதிராகவும் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த பாடலுக்கு எதிரான தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil