Advertisment

எம்.ஜி.ஆர் பிறந்த ஊர்: கேரளா வடகன்னிகாபுரம் ரயில் நிலையத்தை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு!

126 ஆண்டுகள் பழமையான வடகன்னிகாபுரம் ரயில் நிலையம் பயணிகளின் வரத்து குறைந்ததால், இந்திய ரயில்வே துறையினரால் மூடப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
MGR Vadakannigapuram

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் பிறந்த ஊரான கேரளா மாநிலம் வடகன்னிகாபுரம் ரயில் நிலையம் விரைவில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து தொடர்ந்து 3 முறை தமிழ்நாட்டில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட எம்.ஜி.ஆர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பாலக்காடு அருகே உள்ள வடகன்னிகாபுரத்தில் பிறந்தவர் ஆவார். இந்த ஊரில், உள்ள ரயில் நிலையம் இந்தியாவில் உள்ள மிகவும் பழைமைவாய்ந்த ரயில்நிலையங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த ரயில் நிலையம் விரைவில் மூடப்பட உள்ளது.

பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களின் பட்டியலில் 126 ஆண்டுகள் பழமையான வடகன்னிகாபுரம் ரயில் நிலையம் பயணிகளின் வரத்து குறைந்ததால், இந்திய ரயில்வே துறையினரால் மூடப்பட உள்ளது. இதற்கிடையில், வெறிச்சோடி கிடைக்கும் இந்த ரயில்நிலையத்தில் இருந்து, இடத்தின் பெயர் எழுதப்பட்ட மஞ்சள் பலகையை அதிகாரிகள் அகற்றினர். 1898 முதல் டிசம்பர் 10, 2008 வரை ரயில்வேயின் மீட்டர்கேஜ் காலத்தில் பாலக்காடு - பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் வடக்கனிகாபுரத்தில் நின்று கொண்டிருந்தன.

முன்னாள் ராஜ்யசபா எம்பி பாலச்சந்திர மேனன் இந்த ரயில் நிலையத்தில் இருந்து தவறாமல் பயணம் செய்து வந்ததாக பழைய தலைமுறை ரயில் பயணிகள் நினைவு கூர்கின்றனர். இருப்பினும், அகலப்பாதை அறிமுகப்படுத்தப்பட்டபோது, 2015 ஆம் ஆண்டில் மீட்டர் கேஜ் கட்டத்தில் இருந்து ஆறு பயணிகள் ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. தண்டவாளத்தை அகலப்பாதைக்கு மாற்றியபிறகு, திருச்செந்தூர் ரயில் மட்டும் இங்கு நின்று கொண்டிருந்தது; இருப்பினும், ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது.

வடகன்னிகாபுரம் ரயில் நிலையம் புத்தநகரம் ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், கொல்லங்கோடு நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. எனவே, வடகன்னிகாபுரத்தில் ரயில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை. இந்த ரயில் நிலையம் மூடப்படுவதால், ஒரு நூற்றாண்டு கால அற்புதமான வரலாற்றைக் கொண்ட வடகன்னிகாபுரம், காலத்தின் திரைக்குப் பின்னால் மறைந்துவிடும்.

வடவண்ணூரில் உள்ள மகோரா, எம்.ஜி.ஆர் நினைவிடம்

எம்.ஜி.ஆரின் தாயார் சத்தியபாமா வடவன்னூரைச் சேர்ந்தவர், அவருக்கு நினைவிடமாக இங்கு மகோரா என்ற கலாச்சார வெளி உள்ளது. சுவாரஸ்யமாக, இது இப்பகுதியின் முதல் அரிசி ஆலை பாமா ரைஸ் மில் கூட இந்த பகுதியில் இருக்கிறது. மகோரா என்பது எம்.ஜி.ஆரின் முழுப் பெயரான மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பதன் சுருக்கமாகும்.

இந்த நினைவுச்சின்னம் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் (INTAC) பாலக்காடு அத்தியாயத்தின் ஒரு முயற்சியாகும். இது ஓவியங்கள், புகைப்படங்கள், இசை, திரைப்படங்கள் மற்றும் பல கதை சொல்லும் கூறுகளைக் கொண்டுள்ளது, இதைப் பயன்படுத்தி கலைஞரின் வாழ்க்கை குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment