Advertisment

பொங்கல் சிறப்பு பேருந்துகள்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து இயக்கம்? அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 19484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pongal Special Bus

பொங்கல் சிறப்பு பேருந்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 19484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் மொத்தமாக சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையில் 3 நாட்களுக்கு 11006 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும். அதேபோல் தமிழகத்தின் பிற ஊர்களில் இருந்து 8478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பெங்களூர் செல்லும் எஸ்.இ.சி.டி பேருந்து, மற்றும் ஈசியார் வழியாக, மயிலாடுதுறை, கும்பகோணம், வேளாங்கண்ணி செல்லும் எஸ்.இ.டி.சி பேருந்துகள் கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அதேபோல் என்.எச். 45 வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்கின்ற, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தவிர மற்ற எங்கு இருந்தும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள்.இயக்கப்படாது. அதேபோல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அந்தந்த பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக, ஜனவரி 16 முதல் 18-ந் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன், 4830 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல் பிற ஊர்களில் இருந்தும் 6459 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொங்கல் பண்டிகை முடிந்த அதற்கு அடுத்த நாட்களில், 17589 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்து பயணத்திற்காக முன்பதி செய்வதற்கு, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் தலா 5 முன்பதிவு நிலையங்களும், தாம்பரம் சாணிட்டோரியம் பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு நிலையம் என 11 முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள, www.tnstc.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். அதேபோல் TNSTC மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த முன்பதிவு செய்துகொள்வதில் ஏதேனும், சிரமம் ஏற்பட்டால், பேருந்து இயக்கம் குறித்து அறிந்துகொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 2 அலைபேசி எண்கள் அறிவிகக்ப்பட்டுள்ளது.

அதன்படி, 9445014450, 9445014436 ஆகிய இரு எண்களை தொடர்பு கொள்ளலாம். அதேபோல் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து புகார் அளிக்க, 18004256151 என்ற எண்ணில் தொடர்கொண்டு புகார் தெரிவிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசி எண்ணகலான இவற்றுடன் சேர்த்து இன்னும் 3 எண்கள் வழங்கப்படுகிறது. அவை 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய 3 எண்களில் தொடர்கொள்ளலாம்.

சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து மக்கள் செல்வதற்கு ஏதுவாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மாநகர போக்குவரத்தின் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். ஏற்கனவே தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கிய பேருந்துகள் மட்டும், இப்போது கோயம்பேரு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, கோட்டத்தை சேர்ந்த பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த அறிவிப்பை வைத்து பொதுமக்கள் தங்கள் பயணத்தினை திட்டமிட்டுக்கொள்ளலாம். மக்களின் பாதுகாப்பான வசதிகளுக்காக போக்குவரத்துத்துறை சிறப்பாக இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pongal Festival special bus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment