Tamilnadu MP Thiruma Meet Biggboss Vikraman Posted On His twitter அம்பேத்கர் திடலுக்கு வந்த பிக் பாஸ் விக்ரமன்: ஆரத் தழுவி புதிய பட்டம் கொடுத்த திருமா | Indian Express Tamil

அம்பேத்கர் திடலுக்கு வந்த பிக் பாஸ் விக்ரமன்: ஆரத் தழுவி புதிய பட்டம் கொடுத்த திருமா

20 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி்யில், மைனா நந்தினி வைல்டுகார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார்.

அம்பேத்கர் திடலுக்கு வந்த பிக் பாஸ் விக்ரமன்: ஆரத் தழுவி புதிய பட்டம் கொடுத்த திருமா

சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2-வது இடம் பிடித்த விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளனை சந்தித்துள்ள நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி முதல் இந்நிகழ்ச்சியின் 3-வது சீசன் தொடங்கியது.

20 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி்யில், மைனா நந்தினி வைல்டுகார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். 2-வது வாரம் முதல் தொடங்கப்பட்ட வெளியேற்றுதலில், கடைசி வாரம், அசீம், கதிரவன், ஷிவின், விக்ரமன், மைனா நந்தினி ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். அதேபோல் டிக்கெட் டூ ஃபினாலே சுற்றில் வெற்றி பெற்ற அமுதவாணனும் உள்ளே இருந்தார்.

இதில் அமுதவாணன் கதிரவன் இருவரும் பணப்பெட்டியை எடுத்தக்கொண்டு வெளியேறிய நிலையில், வைல்ட்கார் என்ட்ரியாக உள்ளே வந்த மைனா நந்தினியை பிக்பாஸ் வெளியே அனுப்பினார். இதனால் இறுதி போட்டிக்கு அசீம், ஷிவின், விக்ரமன் ஆகியோர் வீட்டில் இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி நாளில் அசீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் அசீம் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக அறிவித்தனர். பிக்பாஸ் வீட்டில் சகபோட்டியாளரை தரக்குறைவாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட அசீமை வெளியேற்ற வேண்டும் என்று பலரும் வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும் தனது கருத்துக்களை வெளிப்படையான தெரிவித்து வந்த விக்ரமனுக்கு நெட்டிசன்கள் ரசிகர்கள் என பல தரப்பினரும் ஆதரவை அளித்து வந்தனர். தொகுப்பாளர் கமல்ஹாசனும் விக்ரமனின் செயல்பாட்டக்கு பலமுறை பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு வெற்றியாளர் பட்டம் கொடுக்காதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6-ல் 2-வது இடம் பிடித்த விக்ரமன், குறித்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த தம்பி விக்ரமனை வரவேற்று வாழ்த்தினேன். பொழுதுபோக்குத் தளமெனினும் அதனைக் கருத்தியல் களமாக்கிய சாதனையைப் பாராட்டினேன். நீங்கள் #TITLE_WINNER அல்ல; #TOTAL_WINNER என ஆரத்தழுவி மெச்சினேன். ஆடைபோர்த்தி அறவேந்தன் சிலை பரிசளித்தேன்”  என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu mp thiruma meet biggboss vikraman posted on his twitter