Advertisment
Presenting Partner
Desktop GIF

காவல்துறை அனுமதியில் பிரச்னை; லியோ ட்ரெய்லர் வெளியீடு ரத்து: விஜய் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம்

ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் பேச்சை கேட்க ஆவலுடன் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

author-image
WebDesk
New Update
Leo Trailer

லியோ டிரெய்லரை திரையிட தடை

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு காவல்துறை அனுமதி அளிக்காததால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது டிரெய்லரை பெரிய திரையில் வெளியிடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான நா வரவா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனிடையே கடந்த செப்டம்பர் 30-ந் தேதி சென்னையில் லியோ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், டிக்கெட் மோசடி மற்றும் காவல்துறை அனுமதி கொடுக்காத காரணத்தினால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் பேச்சை கேட்க ஆவலுடன் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனாலும் ரசிகர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் அடுத்த சில தினங்களில் படாஸ் என்ற லியோ படத்தின் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலும் வழக்கம்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் புயலை கிளப்பி வரும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு லியோ படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 5-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

படம் வெளியான இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், லியோ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த டிரெய்லரை விமர்சையாக கொண்டாட ரசிகர்கள் ரெடியாகி வரும் நிலையில், சென்னை ரோஹினி திரையரங்கின் கார் பார்கிங்கில் பெரிய ஸ்கிரீன் அமைத்து லியோ டிரெய்லர் திரையிடப்படும் என்று தகவல் வெளியானது.

இதனிடையே லியோ டிரெய்லர் திரையிடுவது தொடர்பாக காவல்துறை ஆணையரை அணுகுமாறு கோயம்பேடு காவல்துறை படக்குழுவுக்கு அறிவுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக காவல் நிலையத்தில் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலையில், தற்போது காவல்துறை ஆணையரை அணுகுமாறு பரிந்துரைத்தது படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே லியோ படத்தின் டிரெய்லர் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லியோ' ட்ரெய்லர் வீடியோவை ரசிக்க வழக்கத்திற்கு மாறாக ரசிகர்கள் அதிக அளவில் கூடுவார்கள் அதனால் இந்த முறை மக்கள் கூட்டம் கூட்டுவதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் இதுபோன்ற கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது கூறப்படுகிறது.

காவல்துறை அனுமதிக்காததால் லியோ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், 'லியோ' டிரெய்லர் சிறப்புத் திரையிடலுக்கு காவல்துறை அதிகாரிகளிடமிருந்து ரெட் சிக்னல் கிடைத்துள்ளது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment