Advertisment
Presenting Partner
Desktop GIF

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்: அதிகரிக்கும் சிக்கல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால், அவருடைய புதிய திரைப்படங்களுக்கான பணிகளை தொடங்கும் முன்பு தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு, ஒ.டி.டியில் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது. 
பல திரைப்படங்கள், திரையங்குகள் கிடைக்காமல் தேங்கி கிடப்பதாகவும், இந்த நிலையை மாற்ற புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின் படப்பிடிப்புகளை ஆரம்பிக்கலாம் என்பதால், ஆக்ஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு புதிய திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் நவம்பர் 1ம் தேதி முதல்  சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு தொடர்பான பணிகளை நிறுத்துவது  என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்  முடிவு செய்திருந்தது. 
இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு  தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல் நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக  அறிவித்ததற்கு கண்டனம்  தெரிவிப்பதாகவும், திரைத் தொழிலாளர்கள் பாதிக்கும் தன்னிச்சையான இந்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment