ஆத்தூரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தைக் காட்டிலும் மஞ்சள் வரத்து குறைந்த நிலையில் 2000 ரூபாய் வரை கூடுதலாக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 488 விவசாயிகள் 2,416 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 17 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர்.
இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 17, 189 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 22, 223 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 15, 169ரூபாய்க்கும் அதிகபட்சமாக 18, 159 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 23, 589 அதி பட்சமாக 30,045 ரூபாய் விலை போனது. 2416மஞ்சள் மூட்டைகள் மூலம் 2 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
கடந்த வாரங்களை காட்டிலும் மஞ்சள் வாரத்தில் குறைந்திருந்த நிலையிலும் குவிண்டாலுக்கு 2000 ரூபாய் வரை கூடுதலாக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“