/indian-express-tamil/media/media_files/2025/04/14/PGEemS64KgblxrDR6kTi.jpg)
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் பெற்றவர் என்று எடுத்துக்கொண்டால் அதில் முன்னணியில் இருப்பவர் பெப்சி உமா. பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருந்தது. சின்னத்திரையில் தான் இருந்தவரை சேலை தவிர மற்ற எந்த உடையும் அணியாதவர் என்ற அடையாளத்துடன் இருந்த பெப்சி உமா ரஜினி ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.
இது குறித்து கிங் 24x7 யுடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில், தெரிவித்துள்ளார். பெப்சி உமா அந்த காலத்து கனவு கன்னி. காம்பியரிங் என்பது மனப்பாடம் செய்ததை ஒப்புப்பது மட்டுமே கிடையாது. அதை உள்வாங்கி, யாரிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும்? அவரிடம் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதை பெப்சி உமா சிறப்பாக கையாண்டார். படபடவென பேசாமல், பொறுமையாக பேசுவார். இவரை போல் இப்போது டிடி இருக்கிறார்.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் பெப்சி உமாவுக்கு காதல் கடிதங்களை எழுதினார்கள். அவரை கல்யாணம் செய்து கொள்ள தங்களது ஜாதங்கள் மற்றும் தங்களது, பேங்க் பேலன்ஸ் குறித்த தகவல்களையும் அனுப்பி நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கடிங்கள் பல எழுதியுள்ளனர். ரொம்ப ஹோம்லியாக இருப்பாங்க. நடுத்தர குடுமபத்தை சேர்ந்தவர் உமா மாயவரத்தை சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு வழக்கறிஞர்.
பெப்சி உமாவின் அம்மா பெயர் பத்மா. அந்த காலத்தில் எம்ஜிஆர் போன்ற பிரபலங்களுக்கு நடனம் கற்றுத்தந்த மிக புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் ஒருவரிடம் நடனம் கற்றுக் கொண்டார். தன்னுடைய அம்மாவிடமிருந்து பெப்சி உமா கற்றுக் கொண்டார். சினிமாவில் குஷ்புக்கு கோயில் கட்டியதாக சொல்வார்கள். ஆனால் பெப்சி உமாவுக்கும் குமுளி என்ற இடத்தில் கோயில் கட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து உமாவிடம் கேட்டதற்கு, 'சந்தோஷப்படுவதா? சங்கடப்படுவதா? நல்லதா? கெட்டதா?" தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தீனா படத்தில் அஜித் பெப்சி உமாவிடம் போனில் பேசுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த அளவிற்கு கிரேஷ் கொண்டவர் தான் பெப்சி உமா. ரஜினிகாந்த் நடித்த முத்து உள்ளிட்ட 2 படங்களுக்கு அவருடன் நடிக்க பெப்சி உமாவிடம் கேட்டிருந்தனர். ஆனால், பெப்சி உமா அந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டார். ரஜினிகாந்த் மட்டும் இல்லாமல், பாரதிராஜா அழைத்தும், அந்த படத்தையும் மறுத்துவிட்டார். ஷாருக்கான் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் தவிர்த்துவிட்டார்.
அதேபோல் சேலையில் தோன்றி பொதுமக்கள் மத்தியில் பிரபலமான பெப்சி உமா, சச்சின் டெண்டுல்கருடன் விளம்பரம் ஒன்றில் ஆடை குறைப்பு செய்து நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, டெண்டுல்கருடன் நடிக்கும் விளம்பர வாய்ப்பையும் மறுத்துவிட்டார். மறக்க முடியாத பாராட்டு உங்களுக்கு மறக்க முடியாத பாராட்டு எது? என்று பெப்சி உமாவிடம் கேட்டார்கள். வாய்ப்பேச முடியாத மாற்று திறனாளி குழந்தை ஒன்று, பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை அடிக்கடி பார்த்து வந்தபோது, திடீர்னு உமான்னு கூப்பிட்டதாம்.
இதைக்கேள்விப்பட்டு பெப்சி உமா, குழந்தையை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த குழந்தை மீண்டும், உமான்னு கூப்பிட்டதாம். இதை பார்த்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய்விட்டாராம் உமா. பொறுமையாக, அடக்கமாக, அழகாக, இதமாக பேசுவதும், அவரது தமிழ உச்சரிப்பும்தான், உமாவை மக்கள் நேசிக்க காரணம்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.