வசூலை பிரித்துக் கொள்வதில் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்த புது முடிவு!

கமல்ஹாசன், விக்ரம், விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. 

கமல்ஹாசன், விக்ரம், விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
No tamil film will release after march 27

No tamil film will release after march 27

திரைப்படத்தின் வசூலை பிரித்துக் கொள்வதில், விநியோகஸ்தர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

Advertisment

இதன்படி ’ஏ’ சென்டரில் முதல் வார வசூலில் ரஜினி, விஜய், விஜய் படம் என்றால் 60% எனவும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படம் என்றால் 55% ஆகவும், மற்ற நடிகர்கள் படம் என்றால் 50%மும் விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி,சி சென்டருக்கு இதில் இருந்து 5% அதிகமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர்களுக்கு அனைத்து சென்டருக்கும் 50% வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் இரண்டாவது வார வசூலில் முதல் வாரம் தரும் சதவிகிதத்தில் இருந்து 5% குறைவாக விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu theater and multiplex owners association

Advertisment
Advertisements

இது குறித்து, தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் அசோசியேசனின் தலைவர், திரு.எம்.சுப்பிரமணியிடம் கேட்டோம், “கேரளாவுல எல்லாம் அதிகபட்சமா 60% தான் விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்குறாங்க. ஆனா இங்க தமிழ் நாட்ல அவங்களுக்கு 70%, தியேட்டர் உரிமையாளர்களான எங்களுக்கு 30%. இது குறிப்பிட்ட மண்டலத்துல அல்லது குறிப்பிட்ட படங்களுக்கு கொஞ்சம் மாறும்.

இந்தத் தொகை எங்களுக்கு கட்டுபடியாகல. அதான் இனி விநியோகஸ்தர்களுக்கு 60% வசூலும், எங்களுக்கு 40% வசூலும் பிரிச்சிக்கலாம்ன்னு எங்க அசோஸியேஸன்ல முடிவு எடுத்திருக்கோம்” என்றார்.

இவர்கள் வெளியிட்டிருக்கும் இந்த பட்டியலில், கமல்ஹாசன், விக்ரம், விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: