scorecardresearch

துணிவு கொண்டாட்டத்தில் பலியான அஜித் ரசிகர்: உருக்கமான கடைசி பதிவு

சென்னை சிந்தாகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பரத்குமார் (19) என்ற அஜித் ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடிய போது தவறி விழுந்து மரணமடைந்தார்

துணிவு கொண்டாட்டத்தில் பலியான அஜித் ரசிகர்: உருக்கமான கடைசி பதிவு

துணிவு படத்தின் ரிலீசை கொண்டாடும் விதமாக லாரி மீது ஏறி நடமாடிய அஜித் ரசிகர்கள் கீழே விழுந்து மரணமடைந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித் விஜய் இருவரும் தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இவர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் அந்நாளை திருவிழா போன்று கொண்டாடுவது வழக்கம். அதே போல் இவர்கள் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகும் நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நாளாக இருக்கும்.

அந்த வகையில் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஜித் நடித்த துணிவு விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் இன்று (ஜனவரி 11) வெளியானது. இரு படங்களும் வெவ்வேறு கதைகளத்தில் ஒருவாகியுள்ள நிலையில், தங்களது அஸ்தான நாயகர்களின் படங்களை வரவேற்க அஜித் விஜய் ரசிகர்கள் கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக தயாராகி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்தின் ரசிகர் ஷோ திரையிடப்பட்டது. இதனை ரசிகர்கள் செண்ட மேளம் தாரை தப்பட்டை என தமிழகம் முழுவதும் ஆராவாத்துடன் படம் பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். இதில் சென்னையில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சென்னை மாநகரத்தை பரபரப்பை வைத்தனர்.

அந்த வகையில் சென்னை ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க ஆராவாரத்துடன் வந்த ரசிகர்கள் அந்த வழியாக வந்த லாரி மீது ஏறி நடனமாட தொடங்கினர். அப்போது சென்னை சிந்தாகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பரத்குமார் (19) என்ற அஜித் ரசிகர், லாரியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது முதுகு தண்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோயம்பேடு போக்குவத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித் படத்தை பார்க்க வந்து ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமார் கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தின் அஞ்சல பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில், உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu thunivu ajith fan death in chennai viral his last post