Advertisment

மழைக்காலம் தொடக்கம் : திருச்சியில் விதைப்பந்துகள் தூவும் பணி தீவிரம்

விதைப்பந்துகளில் செம்மண், மாட்டு சானம், தேங்காய் நார் முதலியவை கலந்து தரமான செம்மரம், தான்றி, கடுக்காய், மூங்கில், தேக்கு உள்ளிட்ட பல கன்றுகள் இருக்கும்.

author-image
WebDesk
New Update
Trichy Seeds Ball

திருச்சியில் விதைப்பந்துகள் தூவும் பணி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், எம்.ஆர்.பாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் 20 லட்சம் விதை பந்துகள் தூவும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Advertisment

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பள்ளி மாணவ மாணவியர்கள் உதவியுடன் வனப்பகுதியில் நீர்நிலைகளின் அருகே விதைப்பந்துகள் தூவப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் தற்போது 10 சதவீத வனப்பரப்பு உள்ளது. இதனை 33 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு பசுமை இயக்கம் சார்பாக தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடுதல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக விதைப்பந்துகள் தூவும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக தருமபுரி மாவட்டம் பச்சைமுத்து கல்வி நிறுவனத்தில் 20 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. இந்த விதைப்பந்துகளில் செம்மண், மாட்டு சானம், தேங்காய் நார் முதலியவை கலந்து தரமான செம்மரம், தான்றி, கடுக்காய், மூங்கில், தேக்கு, மலைவேம்பு, கருமருது, குதிரைக்குழம்பு, பூவரசு, ஆல், அரசு, அத்தி, நீர்மருது, வேங்கை, தூங்கு வாகை, சொர்க்கம், பூச்சை, சரக்கொன்றை, நெல்லி, சந்தனம் வில்வம், பிலிவாகை போன்ற விதைகள் வைத்து விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டன.

தற்போது பருவமழை காலம் என்பதால் முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான எம்.ஆர்.பாளையம், தச்சமலை, துறையூர்,பெரியமலை, புத்தாநத்தம் போன்ற வனப்பகுதிகளில் பள்ளி மாணவர்கள் உதவியுடன் 50,000 விதைப்பந்துகள் தூவப்பட்டன. இதனைத் தொடர்ந்து தரம் குன்றிய வனப்பகுதிகளை கண்டறிந்து 20லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணி இந்த பருவமழை காலத்திற்குள் நிறைவடைய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தவிழாவில் உதவி வனப்பாதுகாவலர் சு.சரவணக்குமார் மற்றும் முதன்மை கல்விஅலுவலர் கிருஷ்ணபிரியா, வனச்சரக அலுவலர்கள் வா.கோபிநாத், சுப்ரமணியன், கிருஷ்ணன் மற்றும் பசுமைதோழர் காட்வின் கநிஜில் வாய்ஸ் டிரஸ்ட் ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment