தனது கட்சியின் முதல் மாநாடு நடத்த நிலம் கொடுத்த அனைத்து விவசாயிகளுக்கும் விருந்து வைத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அவர்களுக்கு பரிசும் வழங்கியுள்ளார். தற்போது இந்த விருந்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்பட்டது என்பது குறித:து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். முழுக்க முழுக்க இளைஞர்கள் பங்கேற்ற இந்த மாநாடு பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மாநாட்டில் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விஜய் விருந்து வைத்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில், மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கு விருந்தளித்து நன்றி தெரிவித்த விஜய், அவர்களின் குடும்பத்தினருடன் உரையாடினார்.
மேலும் விருந்தில் கலந்துகொண் விவசாயிகளுக்கு விஜய் பரிசு கொடுத்து கவுரவித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில், அசைவ உணவு இல்லாமல், சாப்பாடு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, உருளைக்கிழங்கு பட்டாணி பொறியல், சௌசௌ கூட்டு, அப்பளம், வடை, பாயாசம், குலோப்ஜாமுன், ஊறுகாய் ஆகிய உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. விருந்துக்கு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியாக விருந்து சாப்பிட்டுவிட்டு விஜயுடன் உரையாடி சென்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“