Advertisment

மாமா விரும்பி சாப்பிடுவார்... உதய் கலாய்ப்பார்... கிருத்திகா உதயநிதி பேட்டி

Tamil News Update : நான் செய்யும் பிரியாணியை ஸ்டாலின் அங்கிள் விரும்பி சாப்பிடுவார். ஆனால் உதய் இதை பிரியாணி என்று சொல்லாதே புலாவ் என்று சொல் என்று கலாய்ப்பார்.

author-image
WebDesk
New Update
மாமா விரும்பி சாப்பிடுவார்... உதய் கலாய்ப்பார்... கிருத்திகா உதயநிதி பேட்டி

Kiruthika Udhayanithai Interview Update : தமிழகத்தின் இளம் அரசியல்வாதியும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி முதல்வர் ஸ்டாலின் தான் செய்யும் பிரியாணியை மிகவும் விரும்பி சாப்பிடுவார் என்று சமீபத்திய கேட்டி ஒன்றில் காறியள்ளார்.

Advertisment

தமிழில் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. தொடர்ந்து விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான காளி படத்தை இயக்கிய அவர் அதன்பிறகு படங்களை இயக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வைரமுத்துவின் நாக்கு செவந்தவலே என்ற பாடலை இயக்கியிருந்தார்.

தமிழகத்தின் முதல்ரின் மருமகளும், எம்எல்ஏ மற்றும் நடிகரின் மனைவியமான கிருத்திகா, திரைத்துறையில் இருந்தாலும் வீட்டில் உள்ள அனைவரையும் கவனித்து வருகிறார். கணவர் உதயநிதி அரசியல் சினிமா என ஓடிக்கொண்டிருக்கிறார்.  அவரது மகன் இன்பநிதி விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு பக்கபலமாக வேண்டிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார் கிருத்திகா உதயநிதி.

இதனிடையே சினிமாவில் படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களை இயக்குவது என பிஸியாக இருந்து வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் சமைக்கும், பிரியாணியை ஸ்டாலின் அங்கிள் விரும்பி சாப்பிடுவார் ஆனால் உதயநிதி இதை பிரியாணி என்று சொல்லாதே புலாவ் என்று சொல் கடையில் வாங்கி சாப்பிடுவதுதான் பிரியாணி என்று கலாய்ப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் தான் சமையல் அறைக்கே அதிகம் போக மாட்டேன. ஆனால் கடந்த வருடம் சமையல் அறையில் எதேர்ச்சையாக நின்றபோது என் மகன் நீ இங்க என்ன பண்றஎன்று கேட்டார் அதை என்னால் மறக்கவே முடியாது. லாக்டவுன் நேரத்தில் பலருக்கும் சமையல்தான் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆனால் எனக்கு அதிகம் சமைக்க தெரியாது. 5 டிஷ் மட்டும்தான் தெரியும். அதையும் நான் 15 வருடங்களுக்கு முன்பு எழுதியை குறிப்பை வைத்துதான் சமைப்பேன்.

நான் செய்யும் பிரியாணியை ஸ்டாலின் அங்கிள் விரும்பி சாப்பிடுவார். ஆனால் உதய் இதை பிரியாணி என்று சொல்லாதே புலாவ் என்று சொல் என்று கலாய்ப்பார். எங்கள் குடும்பத்தில் அனைவரும் இளமையாக இருப்பதற்கு காரணம் என்னோ அத்தை தான். அவர் கொடுக்கும் ப்ரவுன் தோசை, ராகி தேசை, முடக்கத்தான் தோசை என பல ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுப்பார்.

நாங்கள் அனைவருமே இப்படி சத்தான உணவுகளைத்தான் சாப்பிடுகிறோம். அதோடு யோகா செய்வ உடற்பயிற்சி விளைாட்டு போன்றவற்றில் ஆர்வம் காட்டுவது உடல்நலத்திற்கு நல்லது என்று கூறியுள்ளார் கிருத்திகா உதயநிதி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin Kiruthiga Udhayanidhi Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment