Tamil Cinema Actor Simbu Update In Tamil : தமிழகத்தில் பிரபல கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைகழகம நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள சிம்பு, கடந்த 2002-ம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து தம், குத்து, கோவில், மன்மதன் வல்லவன், விண்ணத்தாண்டி வருவாயா செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிப்பு மட்டுமல்லாமல், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், என பன்முக திறமை கொண்ட சிம்பு எழுத்தில் உருவான மன்மதன், வல்லவன்என இரண்டு படங்களும் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. தற்போது சிம்பு, பத்து தல, கொரோனா குமார், வெந்து தனிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சமீபத்தில் வெந்து தனிந்தது காடு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் சிம்புக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பபோவதாக வேல்ஸ் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்கலை கழகங்கள, கலைத்துறையில் சாதனைபடைத்த நபர்களுக்கு ஆண்டுதோறும கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. ஏற்கனவ எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன். விக்ரம், விஜய் ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்ககப்பட்டதை தொடர்ந்து தற்போது அந்த வரிசையில் சிம்பு இணைய உள்ளார். சிம்புக்கு வரும் ஜனவரி 11-ந் தேி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட் உள்ளது.
இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பொது ரசிகர்கள் கடுமயான விமர்சனங்களை கொடுத்து வருகிறன்றனர். இதில் நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில். வேல்ஸ் பல்கலைகழகம் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பதனால் அந்த பட்டத்துக்குதானே பெருமையே ஒழிய சின்ன தலை சிம்புவுக்கு பெருமை என்று எண்ணிவிடாதீர்கள். அவர் திரைத்துறையில் செய்த நியாயமான சேவைகளுக்குத்தான் இந்த அங்கீகாரம்.. நம்புங்கள் .. முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை என்று கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர் சிம்பு வோட சினிமா வாழ்க்கையில நல்ல நடிச்ச படம்னு யோசிச்சா விரல் விட்டு எண்ணுற அளவுக்கு கூட பெருசா ஒன்னும் இல்ல VTV க்கு அப்பறம் அவன் நல்ல நடிச்ச படம்னா அது மாநாடு தான் ஆனா பிறந்து 6 மாசத்துல இருந்து நடிக்கிறாராம் அதுனால டாக்டர் பட்டம் குடுக்குறாங்களாம் என்று கூறியுள்ளார்.
வேல்ஸ் பல்கலைகழகம் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பதனால் அந்த பட்டத்துக்குதானே பெருமையே ஒழிய சின்ன தலை சிம்புவுக்கு பெருமை என்று எண்ணிவிடாதீர்கள். அவர் திரைத்துறையில் செய்த நயமான சேவைகளுக்குத்தான் இந்த அங்கீகாரம்.. நம்புங்கள் .. முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை https://t.co/9BEXbzCGqf pic.twitter.com/nPmeCxZVBA
— கார்த்திகேயன் | Karthikeyan (@I_KKarthikeyan) January 8, 2022
சிம்பு வோட சினிமா வாழ்க்கையில நல்ல நடிச்ச படம்னு யோசிச்சா விரல் விட்டு எண்ணுற அளவுக்கு கூட பெருசா ஒன்னும் இல்ல VTV க்கு அப்பறம் அவன் நல்ல நடிச்ச படம்னா அது மாநாடு தான் ஆனா பிறந்து 6 மாசத்துல இருந்து நடிக்கிறாராம் அதுனால டாக்டர் பட்டம் குடுக்குறாங்களாம்.. 😅
— ¯\_(ツ)_/¯ (@ahiThoughts) January 8, 2022
டாக்டர் பட்டம் பெருமை பெற்றது 🔥🔥🔥 https://t.co/FJ0saWIMaj
— Downey Jr (@Villangam1) January 8, 2022
மற்றொரு ரசிகர் சிம்புக்கு எதுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க .. விஜய்க்கு எதுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க அத்துக்கே இன்னும் விடை தெரியல இப்ப சிம்புக்கு.. அடேய் எனக்கு ஒரு டாக்டர் பட்டம் தாங்கடா.. என்று கூறியுள்ளார்.
பிள்ளைங்களா இன்னும் யாருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கல….? pic.twitter.com/ejSCvmHrqk
— A.P.Perumal (@pachaiperumal23) January 8, 2022
டாக்டர் பட்டம் எவ்வளவு கேவலமா போச்சு.
— 🚩🇮🇳 RAMNAD LEGEND🇮🇳🚩 (@ramnadlegendoff) January 8, 2022
டாக்டர் பட்டம் கொடுக்கறீங்களே…கூட ரெண்டு நர்ஸ் வேணும்னு அடம் பிடித்தாலும்…அனுப்பனும்….ஓகே வா…
— S V Nathan (@SVNathan19) January 8, 2022
மேலும் ஒருவர் படிக்காத எடப்பாடி பழனிசாமிக்கும் நடிக்காத சிம்புவுக்கும் மட்டும் டாக்டர் பட்டம் அப்படியே தருவாங்களாம். ஆனா படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு வச்சு தான் தருவாங்களாம் என கூறியுள்ளார்.
படிக்காத எடப்பாடி பழனிசாமிக்கும் நடிக்காத சிம்புவுக்கும் மட்டும் டாக்டர் பட்டம் அப்படியே தருவாங்களாம். ஆனா படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு வச்சு தான் தருவாங்களாம்..
— சரவணன். 𝓜 (@saravankavi) January 8, 2022
இந்த கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதை முதலில் ஒழிக்க வேண்டும். தகுதி இல்லாத ஒருவன் தகுதியற்ற ஒருவனுக்கு கொடுப்பதெல்லாம் கேவலம். ஏரியில் கல்லூரி கட்டி, கருப்பு பணத்தை வெள்ளையாக்க படமெடுத்து,அந்த படத்தில் நடிக்கும் நடிகனுக்கு சம்பளத்துக்கு பதில் இப்படி பட்ட வேலைகளை செய்வது கேவலமானது என்று ஒருவர் அவேசமான பதிவிட்டுள்ளார்.
இந்த கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதை முதலில் ஒழிக்க வேண்டும். தகுதி இல்லாத ஒருவன் தகுதியற்ற ஒருவனுக்கு கொடுப்பதெல்லாம் கேவலம். ஏரியில் கல்லூரி கட்டி, கருப்பு பணத்தை வெள்ளையாக்க படமெடுத்து,அந்த படத்தில் நடிக்கும் நடிகனுக்கு சம்பளத்துக்கு பதில் இப்படி பட்ட வேலைகளை செய்வது கேவலமானது💢
— Vijay (@Vijay_VJ0703) January 8, 2022
மேலும் நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வரும் நிலையில், இந்த பதிவுகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil