Advertisment

யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி: பிரியாணி மேன் வீடியோ வைரல்; இர்பானுடன் நடந்த மோதல் காரணமா?

பிரபல யூடியூப்பர் பிரியாணி மேன் தற்கொலைக்கு முயன்றது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Briyani Man

யூடியூப் பிரபலங்களாக இருக்கும் பிரியாணி மேன் மற்றும் இர்பான் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், தற்போது யூடியூப் லைவ் வீடியோவில், பிரியாணி மேன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Advertisment

இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், பலர் யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டு தங்களுக்கான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அதே சமயம், தங்களுக்கு போட்டியாக உள்ள யூடியூப் சேனல்கள் குறித்து குறை சொல்வது, அவதூறுகள் பரப்புவது, தங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை பரப்புவது என சிலர் தொடர்ந்து வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது என்றாலும், தற்போது நடைபெற்ற ஒரு சம்பவம், ஒரு யூடியூபரை தற்கொலை முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது. யூடியூப் பிரபலமாக இருக்கும் இர்பான் உணவு குறித்து விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார். தொடக்கத்தில் இவரது வீடியோவுக்கு அவ்வளவாக பார்வையாளர்கள் இல்லை என்றாலும், தற்போது தமிழ்நாட்டின் பிரபலமான யூடியூபர்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளார். இவர் வெளியிடும் வீடியோக்கள் வரவேற்பை பெற்று வருகிறது.

புதிதாக வெளியாகும் படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர்களுடன் இணைந்து சாப்பிட்டுக்கொண்டே அவர்களை இன்டர்வியூ எடுப்பது உள்ளிட்ட பல வீடியோக்களை வெளியிடும் இர்பான தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். பிரபலமாக இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும், இர்பான் கடந்த ஆண்டு கார்விபத்தை ஏற்படுத்தியதில் மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். அப்போது காரை இர்பான் ஓட்டவில்லை. அவரது உறவினர் ஓட்டினார் என்று சொல்லப்பட்டது.

அதேபோல் சமீபத்தில் இவரது மனைவி கர்ப்பமாக இருந்தபோது, குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது குறித்து பெரும் சர்ச்சை வெடித்தது. இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பிரியாணி மேன், இர்பான் தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று கூறியிருந்தார். மேலும் தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது தொடர்பான கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விமர்சனங்களுக்கு இர்பான் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்து பதிலடியும் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் பெரும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

அதேபோல் டெய்லர் அக்கா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி அதில் டெய்லரிங் குறித்த பதிவுகளை வெளியிட்டு வரும் ஒருவர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவர் ப்ளவுஸ் தைத்து கொடுப்பது போல் ஆபாச வீடியோ வெளியிடுவதாக பிரியாணி மேன் புகார் தெரிவித்திருந்தார். தனது வீடியோக்களில் பெண்கள் குறித்து தரக்குறைவாக வன்மத்துடன் பேசி வரும் பிரியாணி மேன் கடுமையாக விமர்சித்த இர்பான், டெய்லர் அக்கா இருவருமே யூடியூப்பில் பெரிய பிரபலங்கள்.

இர்பான் டெய்லர் அக்கா அளவுக்கு பிரபலமாகாத பிரியாணி மேன் பற்றி இணையத்தில் கடுமையாக விமர்சனங்கள் எடுத்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொள்வது போல் யூடியூப் லைவ் வீடியோவை ஓபன் செய்து தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன் என்பவர் தான் என்று சொல்லிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக அவரது தாய் வந்து அவரை காப்பாற்றியுள்ளார்.

இந்த யூடியூப் லைவ் வீடியோவை பார்த்து, பிரியாணி மேன் தாய்க்கு யாரோ போன் செய்ய அதன்பிறகு அவர் வந்து தனது மகனை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல் யூடியூப்பில் பிரபலமாகத்தான் இவ்வாறு செய்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment