அந்த ட்விட்டர் அக்கவுண்ட் எங்களுடையது இல்லை : தமிழ்ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் பெயரில் டுவிட்டர் மற்றும் முகநூலில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளம் கேட்டுக்கொண்டுள்ளது.

தியேடர்களில் ரிலீஸ் ஆகும் புதிய படங்களை சட்ட விரோதமாக இணையத்தில் லீக் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். சமீபத்தில் சர்கார் படத்தையும் அவர்கள் இணையத்தில் லீக் செய்தனர்.

தமிழ்ராக்கர்ஸ் விளக்கம்

அப்படியிருக்க, ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள ‘2.0’ படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை விரைவில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும் என்று தமிழ் ராக்கர் என்று குறிப்பிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

tamilrockers, தமிழ்ராக்கர்ஸ்

இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸ் தனது இணையத்தில் ஒரு பதிவை பகிர்ந்தனர்.அதில், “ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. எங்கள் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால் அது போலியே. அது போன்ற ஐடிக்களை, அவர்கள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close