Advertisment

Darbar Movie: தமிழ் ராக்கர்ஸை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள்

TamilRockers vs Darbar Movie: தமிழ் ராக்கர்ஸிலும் வெளியானாலும்கூட ரஜினிகாந்த் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களை மொய்க்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TamilRockers Darbar movie download, rajinikanth darbar, Darbar full movie download, Darbar tamil movie download, தர்பார் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

tamilrockers.ws.com, tamil gun movie 2020 download, tamil songs download isaimini, தமிழ் ராக்கர்ஸ், தமிழ் ராக்கர்ஸ் தமிழ் மூவி டவுன்லோடு

Darbar Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸை மீறி தர்பார் படம் நல்ல வசூலை குவிப்பது ரஜினிகாந்த் ரசிகர்களையும், படத் தயாரிப்பு தரப்பையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸில் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது.

Advertisment

ரஜினிகாந்தின் தர்பார் படத்தை கடந்த 9-ம் தேதி ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது. படம் ரிலீஸுக்கு முன்பே ரஜினிகாந்த் ரசிகர்கள் இதை எதிர்பார்த்திருந்தனர். எனவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டாலும்கூட, ஒன்றுக்கு பத்து முறை தியேட்டரில் சென்று படத்தை பார்ப்போம் என ட்விட்டரில் கருத்து கூறினர்.

Tamil Rockers Leaked Darbar Full Movie

படம் ரிலீஸாகி, தமிழ் ராக்கர்ஸிலும் வெளியானாலும்கூட ரஜினிகாந்த் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களை மொய்க்கிறது. தவிர, இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்க்க ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.

தர்பார் படத்தின் கலெக்‌ஷன் தொடர்பாகவும் பாசிட்டிவான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 4-ம் நாளில் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷனை கடந்திருப்பதாகவும், உலக அளவில் சுமார் 250 கோடி ரூபாய் கலெக்‌ஷனை தாண்டியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனவே என்னதான் தர்பாரை குறிவைத்து தமிழ் ராக்கர்ஸ் வேலை பார்த்தாலும், ரஜினி ரசிகர்களிடம் அது எடுபடுவதாக இல்லை.

 

Rajinikanth Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment