Kee Movie: காஞ்சனா 3-ஐ தொடர்ந்து ‘கீ’ படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Kee full movie in tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்தப் படத்தை ரசிகர்கள் மொய்ப்பதால் வசூல் ரீதியில் பாதிப்பு நிகழும் அபாயம் இருக்கிறது.

Kee full movie leaked in tamilrockers after kanchana 3: நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் ரிலீஸான ‘கீ’ படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. வெள்ளித் திரையில் படம் ரிலீஸான அடுத்த தினமே, ஆன் லைனில் அந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து, கீ படமும் உடனடியாக ஆன் லைனில் வெளியானது திரைத்துறையை அதிர வைத்திருக்கிறது.

தமிழ் சினிமா உலகுக்கு பிரதான வில்லன், தமிழ் ராக்கர்ஸ் என்கிற சட்டவிரோத இணையதளம்தான். எந்தப் படமாக இருந்தாலும், படம் தியேட்டரைத் தொட்ட அடுத்த சில மணி நேரங்களில் ஆன் லைனில் படத்தை வெளியிட்டு அதிர வைக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

kee movie review, jio rockers tamil, tamilrockers.com, கீ படம்

Kee full movie in tamilrockers: ஆன் லைனில் படத்தை வெளியிட்டு அதிர வைக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Tamilrockers Website Leaked Kee Tamil Movie After Kanchana 3 to Free Download- கீ படத்தை ஆன்லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

ஏற்கனவே ரஜினியின் 2.0, பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம், தனுஷின் மாரி 2, ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 19-ல் வெளியான காஞ்சனா 3 என எந்தப் படமும் இதற்கு தப்பவில்லை. இந்தச் சூழலில் பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான கீ படத்தையும் ரிலீஸுக்கு அடுத்த நாளே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

நடிகர் ஜீவா, நடிகை நிக்கி கல்ராணி நடிப்பில் தயாரான இந்தப் படம் ஓராண்டுக்கு முன்பே ரிலீஸாகியிருக்க வேண்டியது. பல்வேறு சிக்கல்களைக் கடந்து வெளியான படத்தை தமிழ் ராக்கர்ஸ் மேலும் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்தப் படத்தை ரசிகர்கள் மொய்ப்பதால் வசூல் ரீதியில் பாதிப்பு நிகழும் அபாயம் இருக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close