/tamil-ie/media/media_files/uploads/2019/07/Vennila-Kabadi-Kuzhu-2-Tamilrockers.jpg)
வெண்ணிலா கபடி குழு 2
Vikranth's Vennila Kabadi Kuzhu 2 Leaked in Tamilrockers: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குழு 2’. விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமாகியிருந்த இந்தப்படம் கபடியை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்தது.
சரண்யா மோகன், அப்புக்குட்டி, சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். முற்றிலும் புது முகங்கள், புதிய இயக்குநர் கூட்டணியில் வெளியான இந்தத் திரைப்படம் பெரும் வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியிருக்கிறது. சுசீந்திரனின் உதவியாளர் செல்வசேகரன் இதனை இயக்கியுள்ளார். இதில் விக்ராந்த், அர்த்தனா பினு, சூரி, பசுபதி, கிஷோர், கஞ்சா கருப்பு ஊள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. குறிப்பாக இதில், விக்ராந்த், பசுபதி, கிஷோர் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் லீக் செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.