Advertisment
Presenting Partner
Desktop GIF

Tamilrockers Leaked Seema Raja : சீமராஜா தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸ்... என செய்ய போகிறார் சிவகார்த்திகேயன்!

Tamilrockers Leaked Samantha-Sivakarthikeyan Starrer Seema Raja : சீமராஜா திரைப்படம் ஆன்லைனில் ரிலீஸ் ஆகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் ஆ.டி ராஜா ஏற்கனவே நீதிமன்றத்தில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilrockers leaked seema raja and then removed it

tamilrockers leaked seema raja and then removed it

Tamilrockers Leaked Seema Raja  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்  பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே  வெளியான  சீமராஜா திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதனை கடுமையாக விமர்சித்து சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

Advertisment

Read More: Tamilrockers website: மிரட்டும் வில்லன், தமிழ் ராக்கர்ஸ்! என்ன செய்கிறது சினிமா உலகம்?

மேலும்,  படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் விமர்சனம் ரீதியாக கலவையான கருத்துக்களை பெற்றுள்ளது.  இதுக் குறித்து சிவகார்த்திகேயன் இதுவரை  எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

tamilrockers leaked seema raja and then removed it: சீமராஜாவை ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்

கோலிவுட் திரையுலகமே  கண்டு  அஞ்சும்  ஒரு வார்த்தை தமிழ் ராக்கர்ஸ்.  யார் இந்த தமிழ் ராக்கர்ஸ்?  இவர்கள் எங்கு இருந்து செயல்படுகிறார்கள்?  போன்ற எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக யாருக்கும் தெரியாது. ஆனால்  இவர்களிம் முக்கிய வேலையே   புதியதாக திரைக்கு வரும் படங்களை ஆன்லைனில் வெளியிடுவதே.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  நடிகர் சங்க தலைவர் விஷால் உட்பட பலரும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.   ஆனால் தமிழ் ராக்கர்ஸ் இன்றுவரை  புரியாத புதிராகவே  இருந்து வருகின்றன. தமிழ் ராக்கர்ஸ் பெரும்பாலும் அனைத்து தமிழ் படங்களையும் இணையத்தில் வெளியிடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீமராஜா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா,  இந்த படத்தை இணையத்தில் வெளியிட தடை கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

tamilrockers leaked seema raja and then removed it tamilrockers leaked seema raja and then removed it

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டடிருந்தனர்.  இப்படி ஒரு உத்தரவு வெளியான போதும், தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் சீமராஜா திரைப்படம்  நேற்று வெளியாகியுள்ளது.

இதனைப் பார்த்த படக்குழு  அதிர்ச்சி அடைந்துள்ளது.  நடிகர் சிவகார்த்தியேகன் நடிப்பில்  நேற்று வெளியான சீமராஜா திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  அதே நேரத்தில் படத்தின் வசூல்  பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுள்ளதால்  தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டிருந்தனர்.

இந்த நேர்த்தில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன்  இணையதளங்கள்  படத்தை ஆன்லைனில் வெளியிட்டுருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,  சீமராஜா படத்திற்கான இணையதள லிங்க்களை வெளியிட்ட சிறிது நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் நீக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Sivakarthikeyan Tamil Gun Dinamalar News Tamil Rockers Seema Raja Movie Madras Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment