Thambi Full Movie Leaked In TamilRockers: ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ திரைப்படம் நேற்று வெளியானது.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
இதில் கார்த்தியுடன் இணைந்து ஜோதிகா, சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா விமல் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர், மோகன்லால், மீனா நடித்து சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். பின்னர் தமிழில், கமல்ஹாசன் – கெளதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் இப்படத்தை ரீமேக் செய்திருந்தார்.
வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். காமெடி த்ரில்லர் படமான இப்படம் முதல்பாதியில் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் இருக்கும் ட்விஸ்ட் ரசிக்க வைப்பதாக, விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று வெளியான தம்பி படத்தை சிறிது நேரத்திலேயே இணையத்தில் கசிய விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். இதனால் தயாரிப்பாளரும், படக்குழுவினரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.