கடைசியில் சீரியலை கூட விட்டு வைக்கலையே தமிழ்ராக்கர்ஸ்... பாவம் பாபி சிம்ஹா

Vella Raja in Tamilrockers : ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடையில் மனுஷனையும் கடிச்ச கதையா, படத்தை மட்டும் ஆட்டை போட்டுட்டு இருந்த தமிழ்ராக்கர்ஸ் இப்போது சீரியல் தலையிலும் கை வச்சுருச்சு.

ஜிகிர்தண்டா படத்தில் கொடூர ரவுடியாக நடித்த பாபி சிம்ஹா தற்போது அதே போன்ற கதாப்பாத்திரம் ஒன்றில் இறங்கியிருக்கிறார். ஆனால் இம்முறை படத்திற்காக இல்லாமல், சீரியலுக்காக நடிக்கிறார்.

Vella Raja in Tamilrockers : வெள்ள ராஜா சீரிஸ் லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்

அமேசான் பிரைம் முதன் முதலில் தமிழ் வெப் சீரிஸ் ஒன்றை வெளியிட முடிவெடுத்துள்ளது. இந்த சீரீஸில் அனைவரையும் மிரட்டும் பயங்கர டானாக நடிக்கிறார் பாபி சிம்ஹா. வெள்ள ராஜா சீரிஸ்ஸின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியையும் அமேசான் வெளியிட்டிருந்தது. இந்த வெப் சீரிஸ் வரும் டிசம்பர் 7 முதல் அமேசான் பிரைம் இல் ரசிகர்கள் பார்த்து மகிழலாம் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அறிவிப்பின்படி, அமேசான் பிரைம் உபயோகிப்பவர்கள் இந்த சீரிசை கடந்த 7ம் தேதியில் இருந்து பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்புடன் செல்லும் இந்த் சீரிஸுக்கு பெரிய சோதனை வந்துள்ளது. இதுவரை தமிழ் படங்களை திருட்டுத்தனமாக லீக் செய்துக் கொண்டிருந்த தமிழ்ராக்கர்ஸ் வெள்ள ராஜா கோட்டையையும் அசைத்துள்ளது.

வெள்ள ராஜா படத்தின் சீசன் 1 அனைத்து எபிசோடுகளையும் தமிழ்ராக்கர்ஸ் தங்கள் இணையத்தில் லீக் செய்துள்ளனர். இதனால் வெள்ள ராஜா குழுவினர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close