/tamil-ie/media/media_files/uploads/2018/12/ivanukku-engeyo-matcham-irukku-leak-in-tamilrockers.jpg)
Tamilrockers Leaked Ivanukku Engeyo Macham Irukku Full Movie
Ivanukku Engeyo Macham Irukku Movie in Tamilrockers: நடிகர் விமல் நடிப்பில், கடந்த வாரம் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு திரைப்படத்திற்கும் தமிழ்ராக்கர்ஸ் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்கள்.
விமல், ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க A.R.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
Tamilrockers: இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் லீக்
விமல் - சிங்கம் புலி இருவரின் காம்பினேஷனில் வெளியாகி இருக்கும் இந்த படம், 18+ காமெடி படமாக இயக்கப்பட்டுள்ளது. வீடுகளை உடைத்து சென்று சின்ன சின்ன பொருட்களை திருடி, விலைக்கு போட்டு பணம் பார்க்கும் வேலைகளை செய்கிறார்கள் விமலும் சிங்கம் புலியும். இவ்வாறு ஒரு நாள் இருவரும் தனித்தனியே ஒரு பையை திருட, அந்த பைகளுக்குள் முக்கிய பொருள் ஏதோ ஒன்று இருப்பதாக ரவுடி கும்பல் இவர்களை தேடுகிறது.
இறுதியில் இவர்கள் ரவுடிகளிடம் இருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதே கதை. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து அடல்ட் காமெடி படமாக இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் 7ம் தேதியே வெளியான இந்த படத்தை, தமிழ்ராக்கர்ஸ் முறைகேடாக தனது இணையத்தில் லீக் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.