/tamil-ie/media/media_files/uploads/2018/10/sarkar-audio.jpg)
Sarkar Audio Songs in Tamilrockers:
Sarkar Audio Songs in Tamilrockers: சர்கார் படத்தின் இசை வெளியீடு விழாவிற்கு முன்பே படக்குழுவினர்களுக்கு பேரதிர்ச்சி அளித்தது தமிழ் ராக்கர்ஸ்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு விழா நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் அனைவரும் ஆடம்பரமாக தயாராகி கொண்டிருந்த வேளையில் தான் அவர்கள் தலையில் பெரிய கல்லை போட்டனர் தமிழ் ராக்கர்ஸ்.
Sarkar Audio Songs in Tamilrockers: சர்கார் பாடல்கள் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் :
விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்திருந்த சர்கார் ஆடியோ ரிலீஸ் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்த ஆடியோ ரிலீஸ் புரொமோஷன் வேலைகளுக்காக தயாரிப்பு நிறுவனம் போட்டியெல்லாம் நடத்தியது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க வேண்டும் என்றும், இடையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் நபருக்கு ஆடியோ ரிலீசை நேரில் காண டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இத்தகைய சூழலில் தான் அந்த ஷாக் காத்திருந்தது. பாடல்கள் வெளியீட்டிற்கு முந்தைய நாள், சர்கார் படப் பாடல்களின் பட்டியலை டுவிட்டரில் வெளியிட்டது. அந்த லிஸ்ட் வெளியான அடுத்த சில மணி நேரத்திற்குள் அனைத்து பாடல்களையும் இணையத்தில் லீக் செய்தது தமிழ் ராக்கர்ஸ்.
இதனை கவனித்த படக்குழு உடனே அந்த தளத்தை முடக்கியது. ஆனால் அதையும் தகர்த்தெரிந்து அவர்களுடை மெட்ராஸ் ராக்கர்ஸ் பக்கத்தில் பாடல்களை வெளியிட்டது. இந்த நிலைமையினால் எதையும் செய்ய முடியாத நிலைக்கு படக்குழுவினர் தள்ளப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.