புதுப்படங்களை ‘வச்சு’ செய்யும் தமிழ் ராக்கர்ஸ்: முதலில் சாதா... அப்புறம் ஹெச்.டி
Tamilrockers Leaked Tamil Movies To Free Download: மிஸ்டர் லோக்கல், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.
Tamilrockers 2019- Tamil Movies Kanchana 3, Viswasam, Mr Local, Monster are the Victims: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அடுத்தடுத்து புதிய தமிழ் படங்களை ஆன் லைனில் வெளியிட்டு படக் குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. முதலில் சாதா பிரிண்டை ஆன் லைனில் வெளியிட்டாலும், அந்தப் படத்திற்கு ஆன் லைனில் கிடைக்கிற வரவேற்பை பொறுத்து ஹெச்.டி பிரிண்டை களம் இறக்குகிறது.
Advertisment
தமிழ் சினிமாவின் பிரதான வில்லனாக தமிழ் ராக்கர்ஸ் திகழ்கிறது. பேட்ட, விஸ்வாசம், மாரி 2 உள்ளிட்ட படங்களை முதலில் திருட்டுத்தனமாக சாதா பிரிண்டில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், பின்னர் ஹெ.டி பிரிண்டை இறக்கியது. இதற்கு காரணம், ஆன் லைனில் அந்தப் படத்தை பார்க்க சினிமா ரசிகர்கள் மொய்ப்பதுதான்.
Tamilrockers Leaked Monster Tamil Movie: மான்ஸ்டர் படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்
kanchana 3 full movie HD Print Leaked to free download in tamil: காஞ்சனா 3 படம் ஹெச்.டி பிரிண்டை விட்ட தமிழ் ராக்கர்ஸ்
அதேபோல காஞ்சனா 3 படத்தையும் ஆன் லைனில் பார்க்க இன்னமும் ரசிகர்கள் கூட்டம் படையெடுப்பதாக தெரிகிறது. அதனால்தான் அந்தப் படத்திற்கு அண்மையில் ஹெச்.டி பிரிண்ட் ரிலீஸ் செய்தது.
இதன்பிறகு சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை. லேட்டஸ்டாக நீயா படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் அவ்வப்போது தனது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு ஆலிவுட் படம் வரை ரிலீஸ் செய்து விடுகிறது. இதற்கான தீர்வு எதுவும் திரைத்துறையினரிடம் இல்லை.