ரஜினி ரசிகர்களா, கொக்கா? தமிழ் ராக்கர்ஸுக்கே சவால் விடுறாங்க..!

Darbar Full Movie Download Threat From Tamilrockers: அதையும் மீறி படத்தை வெற்றிப் படமாக்குவோம் என இணையதளத்தில் சூளுரைத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

Darbar Full Movie Download Threat From Tamilrockers: அதையும் மீறி படத்தை வெற்றிப் படமாக்குவோம் என இணையதளத்தில் சூளுரைத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Darbar Full Movie Free download, Darbar Full movie free download Tamil rockers, ரஜினிகாந்த், தர்பார், தமிழ் ராக்கர்ஸ்

Darbar Full Movie Free download, Darbar Full movie free download Tamil rockers, ரஜினிகாந்த், தர்பார், தமிழ் ராக்கர்ஸ்

TamilRockers Threat To Darbar Tamil Movie: தமிழ் ராக்கர்ஸ் என்னதான் சில மணி நேரங்களில் தர்பார் படத்தை வெளியிட்டாலும், வசூல் பாதிக்காது என மார்தட்டுகிறார்கள் ரஜினி ரசிகர்கள். இதுவும் ஒரு தில்தான். ஒரு முறைக்கு 10 முறை படத்தை தியேட்டரில் பார்த்து வெற்றிபெற வைப்போம் என்கிறார்கள் அவர்கள். ரஜினி ரசிகர்கள் இந்த சவாலில் தமிழ் ராக்கர்ஸை ஜெயிப்பார்களா?

Advertisment

ரஜினிகாந்தின் பேட்ட, கடந்த பொங்கலுக்கு வெளியாகி பட்டையைக் கிளப்பியது. இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லைக்கா தயாரிப்பில் தர்பார் படம் தயாராகியிருக்கிறது. இதில் நயன்தாரா நடித்திருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் படத்தை இயக்கியிருக்கிறார். பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 9-ம் தேதியே (வியாழக்கிழமை) தர்பார் ரிலீஸ் ஆகிறது.

Darbar Movie vs Tamilrockers : தமிழ் ராக்கர்ஸுக்கு சவால்

Advertisment
Advertisements

ஒவ்வொரு புதுப்படத்தையும் ரிலீஸ் தினத்தன்றே திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், தர்பார் படத்தையும் வெளியிடக்கூடும் என்பதை ரஜினி ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதையும் மீறி படத்தை வெற்றிப் படமாக்குவோம் என இணையதளத்தில் சூளுரைத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி சிவா என்பதவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழ்ராக்கர்ஸும், போலி விக்கிபீடியா உருவாக்குகிறவர்களும் தள்ளி நில்லுங்கள். பேட்ட படத்திற்கு முதல் நாளே முழு கதையையும் ஒருவர் விக்கிபீடியாவில் பதிவிட்டார். அதையும் மீறி 5 முறை, 10 முறை படத்தை ரஜினி ரசிகர்கள் பார்ப்பார்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

இதேபோல ரஜினி ரசிகர்கள் பலர் தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்டு பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். உலக அளவில் 7 ஆயிரம் ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் தர்பார், பிரீ ரிலீஸ் கலெக்‌ஷனாக மட்டும் 200 கோடி ரூபாயை குவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சென்னையில் திரையிடப்படும் தியேட்டர்களில் அடுத்த சில நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு முழுமையாக முடிந்திருக்கிறது.

தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் படத்தை வெளியிடுவதை தடுக்க பட தயாரிப்பு நிறுவனம் முழு மூச்சான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இதற்காக தொழில்நுட்பக் குழுவினரின் உதவியை அவர்கள் நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tamil Rockers Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: