/indian-express-tamil/media/media_files/skipaZaygVrMnpBH3P6e.jpg)
தமிழ் சீரியல் நடிகை வைஷாலி தனிகா
தமிழ் சின்னத்திரையின் முன்னணி நடிகையான வைஷாலி தணிகா, ஆனந்தராகம் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில், ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமான வைஷாலி தணிகா, அதன் பின்னர் 'மாப்பிள்ளை' மற்றும் 'மகராசி' போன்ற சீரியல்களில் நடித்து பாராட்டுக்களை பெற்ற நிலையில், தற்போது சன் டிவியின் 'ஆனந்தராகம்' சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார், இந்த சீரியலில், அவரது அழகு கதாபாத்திரம் தமிழ்த் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ப்ரீத்தி சஞ்சீவ், அனுஷா பிரதாப் மற்றும் அழகப்பன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'ஆனந்தராகம்' சீரியல் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில், இந்தத் தொடரில் வைஷாலி திவ்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதனிடையே தற்போது வைஷாலி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. வைஷாலி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, "திரைக்குப் பின்னால் குழுப்பணி" என்று குறிப்பிட்டுள்ளார்.ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக சீரியல் குழுவினர் எந்த அளவிற்கு முயற்சியில் இறங்குகிறார்கள் என்பதை குறிக்கிறது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் வைஷாலி வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ பதிவில், படப்பிடிப்பு தளத்தில் பிரியாணி சாப்பிடும் காட்சியை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமா வாழ்க்கையில்,வைஷாலி தணிகா, 'கதகளி,' 'திரி,' 'சர்கார்,' மற்றும் 'பா பாண்டி' போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க நடிப்பின் மூலம் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.