Advertisment

'உதயநிதி படத்தை புரமோட் பண்ணுவீங்களா?' துணிவு ட்வீட்டை நீக்கிய மின் வாரியம்

டான்ஜெட்கோ ட்விட்டர் பக்கத்தில், துணிவு படத்தின் போஸ்டருடன் மின்வாரிய ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்த நிலையில், 'உதயநிதி படத்தை புரமோட் பண்ணுவீங்களா? என்று நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில், துணிவு போஸ்டர் ட்வீட்டை நீக்கியது.

author-image
WebDesk
New Update
Tangedco tweets thunivu poster, Tangedco, thunivu poster, Udhayanidhi, டான்ஜெட்கோ, துணிவு போஸ்டர், அஜித் துணிவு ரிலீஸ், உதயநிதி, Red Giant movies, Ajith Thunivu movie release, Tangedco removes tweets Thunivu poster

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) ட்விட்டர் பக்கத்தில், துணிவு படத்தின் போஸ்டருடன் மின்வாரிய ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்த நிலையில், 'உதயநிதி படத்தை புரமோட் பண்ணுவீங்களா? என்று நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில், துணிவு போஸ்டர் ட்வீட்டை நீக்கியது.

Advertisment

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் துணிவு படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

publive-image

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோ (TANGEDCO) என்கிற ஒரு அரசு நிறுவனம். டான்ஜெட்கோ-வின் ட்விட்டர் பக்கத்தில், துணிவு படத்தின் போஸ்டருடன், மின் வரிய ஊழியர்களைப் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதில், “மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் அஜித்தின் துணிவு திரைப்பட போஸ்டரை தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்ஜெட்கோ ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தை புரமோட் செய்வதற்காகவே இவ்வாறு ட்வீட் செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்களை வைத்தனர். மேலும், உதயநிதி படம்னா அரசு நிறுவனத்தில் புரமோட் செய்வீர்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, டான்ஜெட்கோ-வின் துணிவு போஸ்டருடன் கூடிய ட்வீட்டுக்கு எதிர்ப்புகள் எழுந்ததால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோ -வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த துணிவு ட்வீட் நீக்கப்பட்டு உள்ளது.

மேலும், டான்ஜெட்கோ நிறுவனம் மக்களிடையே மின்சாரத்துறை பற்றிய அறிவிப்புகள் எளிதில் சென்று சேரும் விதமாக பட காட்சிகளை வைத்து மீம்ஸ்களும் பதிவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ajith Udhayanidhi Stalin Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment