டாஸ்மாக் மீம்ஸ்: முதலில் தாத்தா! 2வது அப்பா! அடுத்து நாம போவோம்! அப்புறம் எல்லோரும்...
கொரோனா பொது முடக்கத்தால், தமிழகத்தில் 41 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை தொடங்கியது. இதனால், மது பிரியர்களும் நெட்டிசன்களும் சமூக ஊடகங்களில் டாஸ்மாக் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisment
இன்றைய சமூக ஊடக காலத்தில், எல்லா அரசியல் நிகழ்வுகளையும் சமூக நிகழ்வுகளையும் விமர்சனம் செய்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் சிறந்த வடிவமாக மீம்ஸ்கள் உருவெடுத்துள்ளன. பல பத்து பக்கங்களில் எழுதவேண்டிய விமர்சனங்களை எதிர்வினைகளை, பாராட்டுதல்களை ஒரே ஒரு மீம்ஸில் தெரிவித்துவிடுகின்றனர் நெட்டிசன்கள். இன்று இந்திய மொழிகளில் அதிகம் மீம்ஸ் வெளியாகும் மொழி தமிழ் என்றால் அது மிகையல்ல. எல்லாவற்றுக்கும் ஒரு மீம்ஸ் மூலம் தங்கள் அங்கத விமர்சனத்தை சாட்டையாக சொடுக்குகிறார்கள்.
அந்த வரிசையில், கொரோனா அச்சுறுத்தலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 41 நாட்களுக்குப் பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மது வாங்க விரும்புபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் மது விற்பனை செய்ய தமிழக அரசு அறிவித்துள்ளது. வயதின் அடிப்படையில் மது விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
பொதுமுடக்கத்தால் மக்கள் வேலை இல்லாமல் வருமானம் இழந்துள்ள நிலையில், மதுக் கடைகளைத் திறப்பதால், மது பிரியர்கள் மது குடிப்பதால் அவர்கள் குடும்பம் பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் சமூக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மதுக் கடைகளில் கூட்டம் கூடினால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்று திமுக, விசிக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
டாஸ்மாக் மதுக்கடை திறப்பு குறித்து நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். மீம்ஸ் என்றாலே தமிழில் வடிவேலு இல்லாமல் மீம்ஸ் கிடையாது. அப்படி, சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு.
வடிவேலு படம் போட்டு, 10 மணிக்கு தாத்தா போவாரு, 1 மணிக்கு அப்பா போவாரு, 3 மணிக்கு நாம போவோம், அடுத்து மொத்தமா எல்லாரும் செத்து போவோம்.. என்று மீம்ஸ் சாட்டையை சொடுக்கியுள்ளது.
After seeing TASMAC Collections ~ #Kollywood Ena pirindhadhu podhum #Sandalwood Ena Pirindhadhu podhum
திண்டுக்கல் சின்னாளப்பட்டி காந்தி மார்க்கெட்டில் அத்திவாசிய பொருளான காய்கறிகள் வாங்க ஆளு இல்ல...... அவசியமில்ல மது வாங்க அலைமோதும் குடும்ப தலைவர்கள்... என்று ஒரு மீம்ஸ் கூறுகிறது.
7-ம் தேதியில் இருந்து உங்களுக்காக டாஸ்மாக் திறக்கிறோம் என்ற அறிவிப்புக்கு ஐயா என் தெய்வமே என்று மதுபிரியர்களின் சார்பில் இருந்து ஒரு நன்றி மீம்ஸ் வெளியாகி உள்ளது.
இப்படி பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது.