/tamil-ie/media/media_files/uploads/2017/08/kaala.jpg)
ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி ரீலீசாகும் என படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பா.ரஞ்சித் இயக்கும் படம் காலா. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மும்பை சென்று கோலோச்சிய கதைதான் காலா.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். நடிகர் தனுஷ் படத்தை தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. காலா படம் ஏப்ரல் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல் வெளியிட்டு விழாவுக்கான வேலைகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.
The news you have all been waiting for. #kaala TEASER FROM MARCH 1ST. Get ready to be in awe of our one and only Superstar’s charisma and style. “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ pic.twitter.com/3gcKmhWXEQ
— Dhanush (@dhanushkraja) 24 February 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.