மலையாள நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் திவ்யா ஸ்ரீதர் திருமணம் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் பத்தரைமாற்று என்ற சீரியல் மூலமாக ஒன்றாக நடித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்து உறவினர்கள் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வேணுகோபாலன் வெள்ளை தாடியோடு வயது முதிர்ந்த தோற்றத்தில் இருப்பதே ஆகும்.
மாப்பிள்ளைக்கு 60, மணப்பெண்ணுக்கு 40 என்றும், இந்த வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்கிறார்களே இவர்களுக்கு திருமணம் தேவையா? என்றெல்லாம் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து திவ்யா கூறுகையில் நாங்கள் நாலு பேருக்கு மட்டும் தான் திருமணம் செய்யப் போகிறோம் என்பதை தெரிவிக்க ஆசைப்பட்டோம். ஆனால் சமூக வலைத்தளத்தில் ஏன் அப்படி பேசுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.
திருமணம் செய்வது அவ்வளவு பெரிய தவறா என்ன? நாங்கள் திருமணம் செய்து கொண்டால் நெகட்டிவ் கமெண்ட்கள் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு மோசமாக கமெண்ட்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் திருமணம் செய்தது என் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்கவும் அவர்களுக்கு ஒரு தந்தை மற்றும் என் கணவர் என்று கூறுவதற்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காகவே தவிர வேறொன்றுக்கும் இல்லை என கூறியுள்ளார்.
60 வயதானவர் 40 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் வருகிறது. ஆனால் என் கணவர் வேணுகோபாலுக்கு 49 வயது எனக்கு 40 வயதும் ஆகிறது. இனி எங்கள் வயதைப் பற்றி தவறாக பேசுபவர்கள் பேசட்டும் என்று திவ்யா ஸ்ரீதர் கூறினார்.