படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இதில் நடிகை அஞ்சலி சிரிப்பதை பார்த்து பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த விமர்சனங்களுக்கு பாடகி சின்மயி ஸ்ரீபாதா பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கில், விஸ்வக் சென் நடிப்பில் தயாராகியுள்ள படம் கேங்ஸ் ஆஃப் கோதாவரி. அஞ்சலி நேஹா ஷெட்டி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள இந்த படம் வரும் மே 31-ந் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த மே 28-ந் தேதி நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக நந்தமூரி பாலகிருஷ்ணனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்காக மேடை ஏறிய பாலகிருஷ்ணா, மேடையில் நின்றிருந்த அஞ்சலி மற்றும் நேஹா ஷெட்டி ஆகிய இருவரையும் தள்ளி நிற்குமாறு கூறிய நிலையில், இருவரும் பாலகிருஷ்ணாவை கவனிக்காமல் இருந்துள்ளனர். அப்போது பாலகிருஷ்ணனா, அஞ்சலியை பிடித்து தள்ளியுள்ளார்.
பாலகிருஷ்ணாவின் இந்த செயலால் சற்று நிலை தடுமாறிய அஞ்சலி பின்னர் சுதாரித்துக்கொண்டாலும், பாலகிருஷ்ணா செய்ததை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார் இதை பார்த்து ரசிகர்கள் கூட்டம் ஆராவாரம் செய்திருந்த நிலையில், இந்த வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் அஞ்சலி இதை சாதராணமான எடுத்துக்கொண்டாலும், மேடையில் பாலகிருஷ்ணனா அநாகரிகமாக நடந்துகொண்டார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் அஞ்சலியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாடகி சின்மயி ஸ்ரீபாதா அஞ்சலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், 'அதிகாரத்தில் இருக்கும் மனிதர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள்' என்று கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, "இதை மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் இருந்து நான் கவனிக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று 'அவள் சிரிப்பதைப் பாருங்கள். அவளுக்கு _____' இருக்க வேண்டும்.
1. உங்கள் பார்வையாளர்களின் பதிலின் படி பதிலளிக்க முடியாது. நீங்கள் இதை உங்கள் பார்வையில் இருந்து பாருங்கள், உங்களை விட புனிதமானது. புதிதாக விழுந்த பனி போன்ற தூய்மையானது. ஆனால் ஹரிச்சந்திரா / ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி அல்லது அவர்களது உறவினர்கள் இதை புரிந்து கொள்ளத் தவறிவிடுவார்கள்.
“2. தவறாக நடந்துகொள்ளும் ஆண்களை அதிகாரத்தில் அமர்த்த சமூகமே மறுக்கிறது; குறிப்பாக அவர்கள் பணம், சாதி மற்றும் அரசியல் பலத்தால் வந்தவர்கள். பெறுவதற்கும், இழப்பதற்கும் எதுவுமில்லை என்ற நிலையில், பெண்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வந்து சொல்லாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
One of the biggest problems that I notice from people sharing this
— Chinmayi Sripaada (@Chinmayi) May 30, 2024
“Look at her laughing. She should have _____”
1. It is NOT possible to respond according to your spectator response as you watch this on your device. This most moral policing, holier than thou - pure as driven… https://t.co/nzTOlGJm0J
பாலகிருஷ்ணாவைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள எக்ஸ் தள வாசி ஒருவர், "அந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற மனிதர் பல தசாப்தங்களாக இதை செய்து வருகிறார். எப்போது அவர் தனது செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்வார்? என்று கேட்டுள்ளார். அதேபோல், மற்றொருவர், "பாலகிருஷ்ணா அஞ்சலியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். என்ன மாதிரியான நடத்தை இது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில், "இந்த விக் அணிந்த வக்கிரத்தால் அவளைத் தொட்டது அவரது மனச்சோர்வடைந்த ரசிகர்கள் ஒரு பாக்கியம் என்று நினைக்கிறார்கள் சமூகத்தில் எல்லாமே தவறு." என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் சின்மயின் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் பாலகிருஷ்ணாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. அவரை ஆதரிக்கிறார் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.