தனது வீட்டில் தன்னை சுற்றி பேர பிள்ளைகள் இருந்தாலும், தனக்கு அது திருப்தியை கொடுக்கவில்லை. எதோ லேடீஸ் ஹாஷ்டல் வார்டன் போன்ற ஒரு உணர்வையே கொடுக்கிறது என்று தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளது இணையத்தில் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் சிரஞ்சீவி. 1955-ம் ஆண்டு பிறந்த இவர், 1978-ம் ஆண்டு வெளியான, ப்ரானம் கரீடு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல், நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உயர்த்திக்கொண்டார்.
‘தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தை போல், தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் சிரஞ்சீவி, நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் அடியெடுத்து வைத்து முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். இவரின் முதல் படமாக ப்ரானம் கரீடு 1978 செப்டம்பர் 22-ந் தேதி வெளியான நிலையில், சிரஞ்சீவி திரையுலகில் 46 வருடங்களை நிறைவு செய்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல், நடனமாடுவதிலும் சிரஞ்சீவி வல்லவராக திகழ்ந்து வருகிறார்.
தற்போது முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் சிரஞ்சீவி, டோராபாபு இயக்கத்தில் விஷ்வம்பாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சிரஞ்சீவி போலவே அவரது மகன், ராம்சரணும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில இவரது நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
கடந்த 2012-ம் ஆண்டு உபசேனா காமினேனி என்பவரை திருமணம் செய்துகொண்ட ராம்சரணுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, தனது மகனுக்கு அடுத்து கண்டிப்பாக ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார். இது குறித்து அவர், பேசுகையில், என் மகனுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எங்கள் வீட்டில் எல்லோரும் பெண்களாக இருப்பதால், சில சமயங்களில் லேடீஸ் ஹாஷ்டல் வார்டனாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
என் என்னை சுற்றி என் பேத்திகள் இருந்தாலும், அவர்கள் இருப்பது போல் என்னால் உணர முடியவில்லை. குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது ராம்சரணுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரம்மானந்தம் பட விழாவில், ராம்சரணிடம் சிரஞ்சீவி கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சர்ச்சையாகவும் வெடித்துள்ளது,