Advertisment

ஐ மிஸ் யூ டார்லிங்.. பேத்தி வயது நடிகையுடன் ரொமான்ஸ் : சிரஞ்சீவிக்கு கடும் விமர்சனம்

தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நாயகியாக தமன்னாவும், சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரெஷூம் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Chiranjeevi

சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தனது பேத்தி வயது நடிகைக்கு ஐ லவ் யூ டார்லிங் என்று சொன்னது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் சிரஞ்சீவி. தனது நடிப்பின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தமிழில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் ரீமேக் மூலம் திரைத்துறையில் ரீ-என்டரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா மற்றும் காட்ஃபாதர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சிரஞ்சீவி நடிப்பில் தற்போது போலா சங்கர் என்ற படம் தயாராகியுள்ளது

தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நாயகியாக தமன்னாவும், சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரெஷூம் நடித்துள்ளனர். மஹீர் ரமேஷ் இயக்கியுள்ள இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ளது. தமிழ் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தெலுங்கிற்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உச்சக்கட்ட கவர்ச்சியுடன் வந்திருந்த நடிகை கீர்த்தி சுரெஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷை புகழ்ந்து தள்ளிய நடிகர் சிரஞ்சீவி, படப்பிடிப்பு தளத்தில் அவர் உற்சாகமாக இருந்தார். சூட்டிங்கின் முதல் நாளிலேயே தான் அண்ணா கிடையாது என்பதை கீர்த்திக்கு தெளிவுபடுத்திவிட்டேன். படத்தின் நாயகியாகவே தான் கீர்த்தியை பார்த்தேன். வாய்ப்பு இருந்தால் என் அடுத்தப்படத்திலும் அவர் ஹீரோயினாக நடிப்பார்.

கீர்த்தி சுரேஷ் மிகவும் சிறப்பான பெண். படத்தின் சூட்டிங் முடிவடைந்துள்ளதால் அவரை நான் தான் கண்டிப்பாக மிஸ் செய்வேன் ஐ மிஸ் யூ டார்லிங் என்று அவர் கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் மேடைக்கு வந்த கீர்த்தியின் கைகளை பிடித்து தனது கைக்குள் வைத்துக்கொண்ட சிரஞ்சீவி உற்சாகத்துடன் பேசினார். இந்த பேச்சை கீர்த்தி சுரேஷ் புன்னகையுடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தன்னுடைய பேத்தி வயதுள்ள ஒரு பெண் குறித்து சிரஞ்சீவி பொதுமக்கள் முன்னிலையில் இப்படி பேசியது கடும் விமர்சனங்களை எழுப்பியுளள் நிலையில்,  நிகழ்ச்சிக்கு வந்த கீர்த்தி சுரேஷ், சிரஞ்சிவிக்கு வணக்கம் தெரிவித்தபோது அவரும் வணக்கம் தெரிவித்தார். அதன்பிறகு கீர்த்தி சிரித்துக்கொண்டே உடனடியாக சிரஞ்சீவியை கட்டியணைத்து தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Keerthy Suresh Chiranjeevi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment