Advertisment

வாழ்க்கையில் நுழையும் முக்கிய நபர் : பிரபாஸ் வைத்த சஸ்பென்ஸ் ; கல்கி அப்டேட் கொடுப்பாாரோ!

நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், குறியீடாக வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
baahubali prabhas welcomed by crowd at shooting

நடிகர் பிரபாஸ்

நமது வாழ்க்கையில் இன்று ஒருவர் இணையப்போகிறார் என்று நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

பாகுபலி 2 படங்கள் மற்றும் சலார் படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ள தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகராக பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்வி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரபாஸ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில, தற்போது தனது ஸ்டோரியில், ரசகிய குறியீடு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "டார்லிங்ஸ்!! இறுதியாக ஒருவர் நம் வாழ்வில் (ஸ்மைலி ஈமோஜி) நுழையப் போகிறார் (ஸ்மைலி எமோஜி) தயவுசெய்து காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், பிரபாஸ் என்ன சொல்ல வருகிறார்? யார் அந்த நபர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 44 வயதான நடிகர் பிரபாஸ் 'கல்கி: 28298 கிபி' படத்தின் அப்டேட்கள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்திற்கு கல்கி 2898 கி.பிஎன்று பெயர் வைத்தது ஏன் என்று படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "எங்கள் படம் மகாபாரதத்தில் தொடங்கி கி.பி. 2898ல் முடிவடைகிறது. அதுதான் படத்தின் தலைப்பு. இதற்கு 'கல்கி 2898 கி.பி' என்று பெயர் வைத்துள்ளோம். இது 6000 வருடங்கள், காலப்போக்கில் ஒருவிதமான தூரம்" என்று கூறியுள்ளார்.

'கல்கி 2898 கி.பி' கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக்-கானில் அதன் அற்புதமான அறிமுகத்திற்குப் பிறகு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, மிகப்பெரிய உலகளாவிய பாராட்டைப் பெற்றது. நாக் அஷ்வின் இயக்கி, வைஜெயந்தி மூவீஸ் தயாரித்து வரும் கல்கி 2898 AD’  ஒரு பன்மொழித் திரைப்படமாகும், இது ஒரு புராணக்கதையால் ஈர்க்கப்பட்ட அறிவியல் புனைகதையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Prabhas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment