மேலாடை இன்றி நூதனப் போராட்டம் நடத்தி பகீர் கிளப்பிய தெலுங்கு நடிகை!

தயாரிப்பாளர்களின் ரகசிய வீடியோக்கள், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இன்று ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு முன்னணி ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீப காலமாக இவருக்கு வாய்ப்புக்கள் ஏது வரவில்லை என்று தெரிகிறது. இதுக் குறித்து சமீபத்தில் பேசிய இவர் சில தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சினிமா வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்கள் பகிரங்கமாக தெரிவித்தார்.

மேலும், பல பெண்களை ஏமாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் ரகசிய வீடியோக்கள், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இது, தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின்பு தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.

Sri Reddy have gone for Half Nude Protest

Actress Sri Reddy have gone for Half Nude Protest in Public,Opposite the Film Chamber Office Located in Hyderabad.

Posted by INU on 7 एप्रिल 2018

இதனால் ஆத்திரமடைந்த இவர், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், நியாம் கிடைக்கும் வரை போராட போவதாக தெரிவித்து, ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை முன்பு இன்று  அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close