scorecardresearch

நடிகை மார்பில் சிகரெட் போட்டுப் பிடிக்கும் காட்சி: சர்ச்சையில் சுருதிஹாசன் படம்

சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

நடிகை மார்பில் சிகரெட் போட்டுப் பிடிக்கும் காட்சி: சர்ச்சையில் சுருதிஹாசன் படம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியுள்ள வீர சிம்ஹா ரெட்டி படத்தின் பாடல் காட்லி ஒன்றில் நடிகையில் மார்பகத்தில் இருந்து சிகரெட் எடுக்கும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை போன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முன்னணி நடிகர்களில் படங்கள் வெளியாகி வருவது வழக்கம். அந்த வகைகையில் நடப்பு ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

இந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், கன்னட நடிகர் துனியா விஜய் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. டிரெய்லர் முழுவதும் பாலகிருஷ்ணாவே ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்த டிரெய்லரின் பாடல்காட்சி ஒன்றில், நடிகையின் மார்பகத்தில் இருந்து பாலகிருஷ்ணா சிகரெட் எடுப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த காட்சி பார்வையாளர்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மசாலா படங்களை அதிகம் விரும்பும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கூட இந்த காட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஹனிரோஸ் நாயகிகளாக நடித்துள்ள நிலையில், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து சந்திரிக்கா ரவியின் மார்பகத்தில் தான் பாலகிருஷ்ணா சிகரெட் எடுத்துள்ளார்.

இந்த டிரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களில் 52 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் சிகரெட் பிடிப்பதே தவறு இதில் நடிகையின் மார்பகத்தில் இருந்து சிகரெட் எடுப்பது சரியா என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Telugu movie veera simha reddy balakrishna and shruti haasan controversy scene in tamil

Best of Express