/indian-express-tamil/media/media_files/ftHoBzmyHKX6jFqTTggE.jpg)
பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய கணவரும், சீரியல் நடிகருமான சந்து என்ற சந்திரகாந்த் தற்கொலையால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. நடிகை பவித்ரா ஜெயராம் 'திரிநயனி' என்ற தெலுங்கு சீரியலில் திலோத்தமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் தெலுங்கு, கன்னட மொழி சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் மாண்டியா சென்று விட்டு திரும்பிய போது அவரது கார் விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலை விபத்தில் பவித்ரா உயிரிழந்தது முதலே சந்து கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. தனது சமூக வலைத்தளங்களிலும் சோகமான கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சந்து மணிகொண்டாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலுங்கு சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சந்து, பவித்ரா ஜெயராமின் கணவராக திரிநயனி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை தீர்வல்ல
தற்கொலை எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24மணி நேரம்)-ஐ தொடர்பு கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.