பத்திரிக்கையாளர்களின் மைக்கை பிடுங்கி அவர்களை தாக்க முயன்றதான தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகர் மோகன்பாபு. 1974-ம் ஆண்டு அல்லூரி சீதாராமராஜூ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார். தமிழில் ரஜினிகாந்த், சிவாஜி ஆகியோருடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ள மோகன்பாபு, கடைசியாக சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தார்.
மோகன்பாபு மட்டுமல்லாமல், அவரது மகன்கள், மஞ்சு விஷ்ணு, மனோஜ் மஞ்சு ஆகியோரும், தெலுங்கு சினிமாவில், முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். இதனிடையே, கடந்த சில தினங்களாக மோகன்பாவுக்கும் அவரது மகன் மனேஷ் மஞ்சுவுக்கும் சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தாலும் தகவல்கள் எதுவும் வெளியாகிவில்லை.
இதனிடையே தற்போது இந்த புகார்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் ஹைதராபாத்தில் உள்ள மோகன்பாபு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மோகன் பாபு தனது பாதுகாவலர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கை பிடுங்கிய மோகன்பாபு அவர்களை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான மோகன்பாபு மீது, 118 பி.என்.எஸ் பிரிவின் கீழ் தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“