Thadam Public Review : மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் தடம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.
மணிரத்தினம் இயக்கத்தை தொடர்ந்து அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் தடம். இந்த படத்தில் அவருடன் இணைந்து தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் மற்றும் வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார்.
Thadam Public Review : தடம் விமர்சனம்
எழில் மற்றும் கவின் என்ற இரட்டை கதப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். சில முரண்பாடுகள் காரணமாக இரட்டையர்களின் பெற்றோர்கள் பிரிந்து வாழ, அப்பாவிடம் எழில் வளர்கிறார், அம்மாவிடம் கவின் வளர்கிறார்.
எழில் ஐடி ஊழியராக வேலைப்பார்த்து வர, கவின் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபராக சுற்றி வருகிறார். அப்போது தான் படத்தில் ஒரு கொலை நடக்க இந்த கொலையை யார் செய்திருப்பார் என்று சந்தேகம் எழுகிறது.
போலீஸ் இருவரையும் விசாரணை செய்கிறது. இறுதியில் யார் தான் இந்த கொலையை செய்தார் என்பதே படத்தின் முக்கிய டுவிஸ்ட்.
இந்த படத்தை பார்த்த அருண் விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் இவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.