தடம் vs 90 எம்.எல்… நீங்கள் நம்பவில்லை என்றாலும் இது தான் உண்மை!

மார்ச் 1ம் தேதி வெளியான தடம் மற்றும் 90 எம்.எல். ஆகிய இரண்டு படங்களிலும் மக்கள் ச்சீ என சொன்ன 90 எம்.எல். படம் தான் வசூலை குவித்து வருகிறது. ஓவியாவின் 90ml படத்தின் டீஸர், ஸ்நீக் பீக் காட்சிகளை கண்டு பொங்கிய தமிழ் சமூகம், முதல் நாள் காலை 5 மணி ஷோவுக்கு அடித்துக் கொண்டு படத்தை பார்த்தது. படத்தை பார்த்து விட்டு வந்த பிரபல விமர்சகர்களும், படத்தில் கலாசாரம் கெட்டுப்போய்விட்டதாகவும், இந்த படத்தை பார்க்க […]

தடம் vs 90 எம்.எல்
தடம் vs 90 எம்.எல்

மார்ச் 1ம் தேதி வெளியான தடம் மற்றும் 90 எம்.எல். ஆகிய இரண்டு படங்களிலும் மக்கள் ச்சீ என சொன்ன 90 எம்.எல். படம் தான் வசூலை குவித்து வருகிறது.

ஓவியாவின் 90ml படத்தின் டீஸர், ஸ்நீக் பீக் காட்சிகளை கண்டு பொங்கிய தமிழ் சமூகம், முதல் நாள் காலை 5 மணி ஷோவுக்கு அடித்துக் கொண்டு படத்தை பார்த்தது. படத்தை பார்த்து விட்டு வந்த பிரபல விமர்சகர்களும், படத்தில் கலாசாரம் கெட்டுப்போய்விட்டதாகவும், இந்த படத்தை பார்க்க கூடாது என்றும் படத்திற்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியை சரியாக தேடித் தந்து விட்டனர்.

தடம் vs 90 எம்.எல்

நம்ம ஊரில் ஒரு படத்தை அதீத ஆபாசம் காரணமாக பார்க்கக் கூடாது என்று சொன்னால், அப்போது தான் அந்த படத்தின் மீதான ஆர்வம் இளைஞர்களிடம் அதிகரிக்கும். அதன் விளைவாக, அருண்விஜய் நடிப்பில் நேற்று வந்த தடம் படத்தின் சென்னை வசூலை விட ஓவியாவின் 90ml படம் தான் அதிக வசூலை பெற்றுள்ளதாம்.

சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலாக தடம் படம் ரூ.28 லட்சத்தை பெற்றுள்ளது. அதே சமயம் ஓவியாவின் 90ml படம் ரூ. 30 லட்சத்தை அள்ளி இந்த போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னையை தாண்டி தமிழ்நாடு அளவில் தடம் படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thadam vs 90ml box office collection

Next Story
Video : தந்தையை கேலி செய்த கஸ்தூரி… வெவஸ்த வேண்டாமா என திட்டிய நடிகர் கார்த்திநடிகர் கார்த்தி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com