தல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை... கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்

தல 59 படத்தின் பூஜை... மறைந்த ஸ்ரீதேவிக்கு மரியாதை

Thala 59 : விஸ்வாசம் படத்தில் சிறுத்தை சிவாவிற்கு பிறகு தல அஜித் அடுத்ததாக இணைய இருக்கும் இயக்குநர் வினோத். இன்று தல 59 படத்தின் பூஜை ஏற்பாடு.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், சிவாவுடன் அடுத்த படத்தில் இணையவில்லை. அதற்கு பதில் தீரன் அதிகாரம் படத்தை இயக்கிய வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார். இந்த படத்தின் கதை பிங்க் ரீமேக் கதையாகும். அமிதாப் நடித்த வேடத்தி அஜித் நடிக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

Thala 59 : தல 59 படத்தின் பூஜை

இந்நிலையில் தல 59 படத்தின் பூஜை நடத்தப்பட்டது. பூஜையின் போது மறைந்த ஸ்ரீதேவியின் புகைப்படத்துக்கு மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது. படத்துக்கு பூஜை போடப்பட்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வினோத் வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமா? அஜித்தின் ரசிகர்கள் அனைவரும், தல வாக்கு கொடுத்தால் காப்பாற்றாமல் இருக்க மாட்டார் என்றும் ட்வீட் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் இந்த பூஜை நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ரீதேவி புகைப்படம்.

Thala 59

நடிகை ஸ்ரீதேவி மறைவின் பொழுது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத அஜித், அடுத்த படம் தொடங்கும்போது நிச்சயம் அவருக்கான மரியாதையை அளித்த பிறகே தொடங்குவேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்றைய தல 59 பூஜையில் ஸ்ரீதேவி புகைப்படத்திற்கு பூஜை போட்டு தொடங்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Thala 59

விஜய் 63 ஒருபுறம் விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்க, தல 59 அஜித் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கிளப்பியிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close