/tamil-ie/media/media_files/uploads/2018/05/actor-ajith-1.jpg)
actor ajith, kavalan app
தல 59 படத்தின் ரிலீஸ் தள்ளி போனது அஜித் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்பட்டிருந்தாலும் அதற்கான காரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம் படம் இதுவரை சுமார் 135 கோடிகளை வசூலித்து, இன்றும் தியேட்டர்களை விட்டு நீங்கமல் நிலைக் கொண்டிருக்கிறது.
தள்ளிப் போகும் தல 59 ரிலீஸ்
இந்நிலையில் பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சீ ஆகியோர் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக அஜித்தின் 59வது படம் உருவாகி வருகிறது. மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளது.
அதற்கான காரணம், பிங்க் படத்தின் ரீமேக் என்பதால் அஜித்திற்கு பெரிய அளவில் மாஸ் இருக்காது என்பதே. எனவே தமிழ் ரசிகர்களுக்கும் அஜித்திற்கு ஏற்றார் வகையில் கதையில் மேலும் சில மாற்றங்களை கொடுக்க இயக்குநர் வினோத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்காக அஜித் மேலும் 10 நாட்கள் கால்ஷீட் கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. ரிலீஸ் தேதி தள்ளிப் போவது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், அஜித்தின் மாஸான காட்சிகளுக்காகவே இந்த ஏற்பாடு என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியையே அளித்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.