நடிகர் அஜித் தற்போது ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகியப் படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இதனை இயக்கியிருக்கிறார். பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ’பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்காக இது உருவாகிறது.
வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இதனைத் தயாரிக்கிறார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘தல 60’ படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக சில தினங்களாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
’வாலி’ படத்தில் அஜித்தின் நடிப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போன எஸ்.ஜே.சூர்யா மீண்டும் அவருடன் இணைவது குறித்து மகிழ்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.
Dear all , it’s a fake news that I am part of thala 60 …. I have great respect for our Ajith sir and @SrideviBKapoor ji ……… don’t spread such fake news… thx … sjs
— S J Suryah (@iam_SJSuryah) 7 June 2019
ஆனால் இந்தத் தகவல் வெறும் வதந்தி எனக் கூறி, ட்விட்டரில் விளக்கமளித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.