Thala 60: ”நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தப் படமான ”தல 60”யின் அதிகாரப்பூர்வ அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இந்தப் படத்தின் பூஜை இன்று (அக்டோபர் 18) நடைபெறுகிறது. இதையொட்டி #THALA60PoojaDay என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
Advertisment
”தல 60” படக்குழுவினரைச் சுற்றி ஏராளமான யூகங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து அஜித்தின் இந்தப் படத்தையும், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். சமீபமாக தான் நடித்த பல படங்களில் 'வி'யில் ஆரம்பிக்கும் டைட்டிலைக் கொண்டிருந்தார் அஜித். அந்த வகையில் “தல 60” படத்தின் டைட்டில் குறித்து ஓர் சுவாரஸ்யமான விஷயம் வெளியாகியிருக்கிறது.
அதாவது 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை உள்ளடக்கிய பட்டியலிலிருந்து, ”தல 60” படத்துக்கு 'வலிமை' என்ற டைட்டிலை டிக் செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
Advertisment
Advertisements
அதோடு, கடந்த 2015-ம் ஆண்டு அஜித் நடித்த அதிரடி திரில்லர் படமான ”என்னை அறிந்தால்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய், ”தல 60”யில் வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இருப்பினும் முழுமையான நடிகர்களின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. தவிர, தல 60 படத்திற்கு அனிருத் அல்லது ஜிப்ரான் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.